Friday, November 28, 2008

சிந்திக்கச் சில

1.பதவியிலும் பணிவு வேண்டும்

2.தோல்வியிலும் தைரியம் வேண்டும்

3.கோபத்திலும் பொறுமை வேண்டும்

4.அதர்மத்திலும் பயம் வேண்டும்

5.ஏழ்மையிலும் நேர்மை வேண்டும்

6.செல்வத்திலும் எளிமை வேண்டும்

7.வறுமையிலும் ஈகை வேண்டும்

8. துன்பத்திலும் உண்மை வேண்டும்

Monday, August 25, 2008

சில நீதிகள்..............

1.எதைச்செய்தாலும் உன் அடையாலத்தை விட்டுச் செல்.

2.தவருகள் திருத்திக்கொள்ளக் கூடியவை. அல்லது திருத்திக்கொள்ள கூடிய தவறுகளைச் செய்

3.வாழ்கை என்பது வெளியில் எப்படித் தெரிகிறோம் என்பதில் இல்லை, உள்ளுக்குள் என்னவாக இருக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

4.வாழ்வில் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கூர்தீட்டாமல் எப்படி வெற்றிபெற முடியும்?

5.உன் திறமை சிறப்பாக வெளிப்பட வேண்டுமானால், உன்மீது அக்கறைகொண்ட
இன்னெருவரின் கையில் உன்னை முழுமையாக ஒப்படைத்துவிடு!

Friday, August 22, 2008

காதல் பற்றிய சிந்தனை,,,,,,,,,,

இது ஓர் மனநல வைத்தியரின் கருத்து

காதல் எனபது _ நம்பிக்கை ,அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் ,அக்கரை,பகிர்ந்து
கொள்ளுதல் போன்ற வற்றை உள்ளடக்கியது. காதல்_ சந்தோஷம் ,மன அழகு ,
உண்மை, கண்ணீர் போன்ற உணர்வுகளால் வெளிப்படும்.
ஒவ்வொரு கணமும் அந்த உணர்வு தொடர வேண்டும், உளப் பூர்வமான திருப்பி
ஏற்படுவதால் தான் காதலை, காதலர்கள் விரும்பி ஏற்கிறார்கள் ஆனால்,
நடைமுறை வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தோன்றும்.இன்றைய அவசர
உலகில் பல வற்றை கடந்து தான் வாழவேண்டியிருக்கின்றது .இதையெல்லாம்
மீறி காதல் வேண்டும்.
காதலர்களாக இருக்கிற பலர்_ கல்யானத்துக்குப் பிறகு தங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்.
வாழ்வில் எல்லாத் துளியிலும் இருக்க வேண்டிய உணர்வு ,ஏனோ பின்னுக்குத் தள்ளப்படுவது தான் பிரச்சனை.

என்னை ரசிக்க வைத்து... சிந்திக்க வைத்த கவிதைகள்

அம்மா அப்பா விளையாட்டு

எதிர் காலத்தில
உம் பொண்ணும் எம் பையனும்
லவ் பண்றோம் னு வந்து
நிப்பாங்க, அது தேவையா?
நாம் ஏன் அவங்களை
அண்ணா,தங்கச்சியா
மாத்தக் கூடாது......
வா அன்பே அதைச் செய்வோம்!
- மா. மணிவண்ணன் தொகுப்பிலிருந்து
*******************
நட்புக் காதல்

உன்னைக் கண்ட
நாள் முதல்
நட்புக் கொண்டேன்..
பின்பு காதல் கொண்டேன்!
நட்பு உன் மீது
காதல் உன் நட்பின் மீது!
_ எழுதியவர் ப.ஜனனி

*********
நான்
மழை நீரில்
நடந்து செல்ல
விரும்புகிறேன்_ ஏனனில்
நீ தந்த பரிசான
கண்ணீர் துளிகளை
மறைப்பதற்கு!!!
_ எழுதியவர் நெளசாத் அலி

********
காதல்

நான் காதலிக்கின்றேன்
போர்க் களத்தில்
ஒரு காலை இழந்தவன்
இன்னெரு காலை
நேசிப்பது மாதிரி!
எழுதியவர்....மாய காவ்ஸ்கி

*********************
நட்பிலக்கணம்!

நீ எனனிடம் பேசியதை விட
எனக்காகப் பேசியதில் தான்
உணர்த்தேன் உன் நட்பை!
எழுதியவர்.....அனுசியா
************************
தாயின் குரல்

பட்டினி கிடந்து
பள்ளியில் சேர்த்தேன்
கல் மண் சுமந்து
கல்லுரியில் சேர்த்தேன்
வெயிலில் வெந்து
வேலையில் சேர்த்தேன்
நீயோ.....
என்னை எளிதாய்
சேர்ந்து விட்டாய்
முதியோர் இல்லத்தில்!
எழுதியவர்.....வெற்றிச் செல்வி

Tuesday, August 19, 2008

குழந்தையும் அறியவேண்டும் குடும்ப வாழ்வை

அதற்கான சிறு துளிகள்..........

1.நீங்கள் என்ன வேலை பார்க்றீர்கள், உங்களுடைய வேலையின் தன்னை என்ன,
அதற்கான மாத வருமானம் எவ்வளவு என்பதைக் குழந்தைக்குச் சொல்லுங்கள்.
எதற்காக வேலைக்குப் போக வேண்டும் என்பதையும் புரியவையுங்கள்.

2.பணத்தை தொட்டாலே தவறு என அலறாமல் ,நாணயத்துக்கும் ¨ரூபாய் நோட்டுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கற்றுக் கொடுங்கள்;

3. குழந்தையின் படிப்புக்காகச் செலவாகும் ஒவ்வொரு காசையும் தனியாக குறிந்து வையுங்கள். குழந்தைக்கு புரிகின்றதோ ,இல்லையோ வருட இறுதியில்,அந்தப் பட்டியலை படிந்து காட்டுங்கள்.

4.கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். பொருட்களில் மேல் குறிப்பிட்டிருக்கும் விலையைப் படிக்கக் கற்றுக் கொடுங்கள்.
பணத்தை குழந்தையின் கையில் கொடுத்து எண்ணிப் பார்த்துக் கொடுக்கப் பழக்குங்கள்.

5. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருந்தால் ,அதை குழந்தையிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அந்தனை கஷடங்களையும் தாண்டி வருவததான் வருமானம் என்பதை புரிய வையுங்கள்.

6 ஆளில்லாத அறையில் மின்விசிறி சுற்றுவது , யாரும் பார்க்காமல் டி வி இயங்குவது ...சின்ன சின்னவிரயங்கள் கூட குடும்ப நிதிநிர்வாகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லி ,அதைத் தவிர்க்கவும் சொல்லிக் கொடுங்கள்.

7 விருப்பத்திற்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்துங்கள். விருப்பு கிற பொருள் எல்லாம் தேவையானதாக இருக்க வேண்டியதில்லை என்பதையும்,
தேவைக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும் என்பதையும் தெளிவாக்குங்கள்.

Monday, August 18, 2008

சிந்திக்கச் சிந்தனைகள்......

இனம் இனத்தோடு பணம் பணத்தோடும்......................

பணம் பணத்தோடு என்பதில் உண்மையில்லை. ஏற்கெனவே பணம் இருப்பதால்
மட்டுமே ஒருவனைப் பணம் தேடி வந்து விடாது.
ஆசைப் படுவதால் மட்டுமே ஒன்றை அடைந்து விட முடியுமா?
நிலவில் கால் வைக்க வேண்டும் என்று மனிதன் ஆசைப் பட்டான்.
அந்த ஆசை மட்டுமா அவனை அங்கே கொண்டு சேர்த்தது? அதற்கான முயற்ச்சிகளில்
அவன் முழுமையாக ஈடுபட்டான். நிலவையும் அங்குள்ள சூழலையும் புரிந்து கொண்டான்.
தன் திறமையைப் பயன்படுத்தி அங்கு செல்வதற்கான வாகனத்தையும் தயார் செய்தான்.
வெற்றி கண்டான்.
பணம் நிறைய வைத்திருந்தும், அதைப்பெருக்குவதற்கான திறமையை வளர்ந்து
கொள்ளக்கொள்ளாதவருக்கு மேற்கொண்டு பணம்கிடைத்துவிடாது.
பணக்காரனிடம்தான் பணம் சேரும் என்று சலித்துக்கொண்டு, முயற்சியில்
ஈடுபடாமல் இருப்பதற்கான இந்த சோம்பல் வார்த்தைகளை நம்பாதீர்கள். இன்று
பணக்காரர்களாக இருப்பார்கள் பலரும் இந்த வார்த்தைகளை நம்பிச் சோர்ந்து போகாமல்,
தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு சலிக்காமல் உழைத்ததால்தான் இந்த இடதை
அடைந்திருக்கிறார்கள்.
ஆசைப்படுங்கள். அடைவதற்கான திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்? அடையுங்கள்!



***************
நேரம் சரியில்லை என்றால் யானை மீது சென்றாலும் நாய்
கடிக்கும்..............

யானை மீது செல்லும்போது, நாய் கடிக்கும் என்றும் பயந்து கீழேயே
பார்த்துக்கொண்டு போனால், ஏதோ ஒரு மரக்கிளை உங்கள் மீது மோதலாம்,
கீழே தள்ளலாம்; அங்கே ஒரு நாய் மீது நீங்கள் விழ, அது மரணடு போய்
உங்களை கடிக்கலாம்.
இந்தச் சங்கிலித் தொடர் நிகழ்வுகளை தெய்வச் செயல் என்று சொல்லித்
தப்பிக்கப் பார்க்காதீர்கள்.
மரக்கிளை உங்கள் மீது மோதவில்லை. நீங்கள் தான் கவனமில்லாமல், மரக்கிளை
மீது மோதிக்கொண்டீர்கள்; நாய் மீது விழுந்தீர்கள். அறிந்து செய்தாலும்; அறியாமல்
செய்தாலும்; உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு இருக்கத்தான்
செய்யும். உங்கள் கவனமின்மையால் நேர்ந்த நிகழ்வை; நேரம் சரியில்லை என்று
என்று அதன் மீது பழி போட்டு மூடி மறைப்பது என்ன நியாம்?

உங்களைக் கடித்தது நாய் அல்ல; கவனமற்ற உங்களின் முட்டாள்தனம்தான்!
வாழ்கையில் மோசமான நேரம் என்பதே கிடையாது வாழ்வின் ஒவ்வொரு
கணமும் அற்புதம்தான்!



******************
வரும்பியது கிடைக்காதபோது கிடைத்ததை விரும்பு!...

இது முற்றிலும் தோல்வி மனப்பான்மையில் சொல்லப்பட்ட தத்துவம்.இதன்
கருத்து, இப்போது கிடைந்திருப்பதை விரும்பு! அதே சமயம் உன் சொந்த விருப்பதை விட்டுக்கொடுக்காதே! எனலாம்
விரும்பியது கிடைப்பதற் ஆசை மட்டும் போதுமானதல்ல; அதை பெறுவதற்கான திறமையும் முயற்சியும் தேவை. கிடைத்தை விரும்பாமல் வெறுக்கும் போது, அந்த அதிருப்பி உங்கள் திறனை மழுங்கச் செய்து விடும்.
பல விதங்களில் உங்களை முடக்கிப் போடும். விரும்புவதை நோக்கி முழுமையாகச்செயல்படவிடாமல் தடுக்கும்.
எனவே எந்த சூழ்நிழையில் இருந்தாலும், அதை விரும்ப கற்றுக்கொள்ளுங்கள்.
சொந்த வீடா? அதன் நிறைவை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.வாடகை வீடா?
வேண்டாமென்றால் உதறி விட்டுப் போகலாம் என்ற விடுதலை உணர்வை ரசியுங்கள்.
நீங்கள் ஆனந்தமாக இருக்கும் போது தான் ,உங்கள் திறன் உச்சத்தில் இருக்கும்.
விரும்பியது கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்!

Saturday, August 16, 2008

ஜோதிடம்

பிறந்த திகதியை வைத்து மனிதரை அறியலாம்.............

மேளதாளம் முழங்கிக் கொண்டிருக்கும் ஒரு திருமணமண்டபத்தில்
நுழைந்தவுடன் என்ன அற்புதமாய் பாடுகின்றார்...்
பிரமாதமான சாரீரம்! அடாட....என ஒருவர் இசையை ரசித்தப் பாராட்டிப்
பேசுகிறார் என்றால், அவர் வேறு யாருமில்லை ஆறாம் எண்ணில் பிறந்தவர்............

அதே பாட்டை ரெண்டாவது சரணத்தில முதல் வரியைப் பாடும் போது கொஞ்சம் சொதப்பிட்டார்.
பாடும் போது சின்னதா இழையா பிசிறு தட்டறது. என்ன இருந்தாலும் நம்ம ராஜா மாதிரிவருமா
என்று உதட்டோரம் சிரித்து அலுத்துக்கொண்டு ஒருவர் அமர்ந்துபேசிக்கொண்டு இருந்தால்.
அவர் வேறு யாருமில்லை இரண்டாம் எண்ணில் பிறந்தவர்.........

சாப்பாட்டில் உப்பு அதிகம். தக்காழி ரசம் சூப்பர் இரண்டாவது தரமும்
வாங்கி குடித்தேன். என்று சொல்லி வெற்றிலை பாக்கு பேட்டு பேசுகிக் கொண்டு
இருந்தால்் அவர் வேறு யாருமில்லை எட்டாம் எண்ணில் பிறந்தவர்.........

பெண்ணை விட மாப்பிளை குறைவான சம்பளம் வாங்கறானாமே. பெண் வீட்டுக்காரங்க
எல்லா விடையத்திலும் ஒரு படி மேல்தான் போல இருக்கு என்று தனது வலது கட்டை விரலை
உயர்த்திக் காண்பித்து மணமகள் நிலை குறித்து பக்கத்தில் இருபவரிடம் பட்டியலிட்டு பேசிக்கொண்டு
இருந்தால் சந்தேகமேயில்லை அவர் வேறு யாருமில்லை மூன்றாம் எண்ணில் பிறந்தவர்........

மணமகன் மணமகள் கழுத்தில் மூன்று முடிச்சுப்போடும் நேரத்தில் வேகமாக உள்ளே நுழைந்து
கொஞ்சம் பெரிய மண்டபம் பார்த்திருக்கலாம் என்னுடைய தம்பி வந்திருந்தான் அவனை
வாங்கன்னு கூட்டிவரக் கூட யாருமில்லை சே! என்று குறைபட்டுக் கொள்பவர் வேறு யாருமில்லை
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்........

மணமக்களுக்கு அவரமாக அட்சதை தூவிவிட்டு திருமணதிற்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்திருடன்
அரசியலையும் உலக விடயங்களையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே விவாதித்து விட்டு சட்டென்று
புறப்பட்டுக் கொண்டிருப்பவர்...... வேறு யாருமில்லை முதலாம் எண்ணில் பிறந்தவர்

அன்பளிப்பு கொடுதாச்சா எல்லோரும் சேர்ந்து போட்டே எடுத்தாச்சா நம் வீட்டாரை விட அவர்கள்
பரவாய்இல்லை எல்லாவற்றையும் அனுசரித்து போகின்றார்கள் என்று தொடங்கி பெண்ணிண் புடவை
தொடக்கம் நகை வரை எல்லா அலங்காரங்களையும் கண்காணித்து விமர்சனம் செய்து மொண்டு
இருப்பவர் வேறு யாருமில்லை ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்............

திருமணத்திற்கு வந்திருக்கும் பழய நண்பரை பார்த்து கட்டி பிடித்து பழய நினைவுகளில் முழ்கி
வாய்விட்டு சிரித்துக் கொண்டு இருந்தால் அவர் வேறு யாருமில்லை நாலாம் எண்ணில் பிறந்தவர்............

மேலே உள்ள உரையாடல் ஒவ்வொரு மனிதனையும் எண்கள் எப்படி ஆட்சி செய்கின்றன என்பதன் சிறு வெளிப்பாடுதான்........

Thursday, August 14, 2008

தாயும் சேயும்

அடிக்கடி கர்பினிபெண்களுக்கு ஏன் அறுவைச்சிகிச்சை
நடைபெறுகின்றது? (இதற்காண சில காரணம்)

1.பிரசவ வலிஆரம்பிக்கும்போதே குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு
நஞ்சுக்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொண்டிருப்பது

2. முதல் பிரசவம் அறுவைச்சிகிச்சையாக இருந்தால் இரண்டாவது மறையும்
அறுவைச் சிகிச்சைக்கு செல்வது பொதுவாக பாதுகாப்பானது.காரணம்
பிரசவ வலியினால் கர்ப்பப்பை கிழிந்து போக வாய்ப்பிருப்பதைத் தவிர்க்கலாம்

3. குழந்தையின் தலைபெரிதாக இருந்து தாயின் இடுப்பெலும்ப சிறியதாக
இருக்கும் போது

4.பனிக்குடம் உடைந்து பிரசவவலி வரவில்லை என்றாலும் அறுவைச்சிகிச்சை
தேவைப்படும்

5.பனிக்குடம் உடைந்தம் பிரசவ வலி அதிகமாக இருந்தும் குழந்தை பிறக்கவில்லை
என்றால் அறுவைச்சிகிச்சை தேவைப்படும்

6.ஏற்கெனவே சில முறை குழந்தை இறந்து பிறந்தவர்களுக்கு நிறை மாதத்திற்கு
முன்பே அறுவைச்சிகிச்சை தேவைப்படும்

7.கர்ப்பப்பை அடி இறங்கி அதனை சரி செய்ய அறுவைச்சிச்சை செய்திருந்தால்
தேவைப்படும்

8. கருப்பை வாயில் புற்றுநேய் தாக்கி இருந்தால் தேவைப்படும்

9. தாய்க்கு அதிக இரத்த அழுத்தம் நீரழிவு போன்ற பிரச்சைகள் இரக்குமானால்
குழந்தைக்கு பிரச்சை ஏற்படுவதை தடுக்க தேவைப்படும்

10. நிறைமாதத்திற்குப் பிறகும் வலி தூண்டிவிடப்பட்ட பிறகும் வலி வராத நிலையில்
தேவைப்படும்

11. நஞ்சுக்கொடி பிரசவப் பாதையை அடைத்திருந்தால் தேவைப்படும்

12. கருப்பையில் ஏதாவது கட்டி இருந்தால் தேவைப் படும்

13. வயது முதிர்ந்த பெண்களுக்கு சுழ்நிழையைப் பொறுத்து தேவைப்படலாம்

14. யோனிக்குழாயின் அமைப்பு சீரற்று இருந்தால் தேவைப்படலாம்

15. குழந்தையின் வளர்ச்சி குறைவாக இருந்தால் தேவைப்படும்

16 செயற்கை முறை கருத்தரிப்பு குழந்தைக்கு அறவைச்சிகிச்சை தான்
பாதுகாப்பு என்றால் தேவைப் படும்

Wednesday, August 13, 2008

நான் படித்ததில்... எனக்குப் பிடித்தவை

பத்து நிமிடத்துக்கு முன் நாம் எப்படி இருந்திருக்கக் கூடாது என்பதில் இருந்து
பத்து வருடத்துக்கு முன் நாம் எப்படி வாழ்ந்திருக்கக் கூடாது என்பது வரை நாம்
யோசித்துக் கொண்டேயிருக்கும் ஒவ்வொரு யோனைகளும்தான் நம் பொன்னான நேரத்தை வீணாக்கி கொண்டேயிருக்கின்றன.
எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக்கூடாது என்ற வாழ்வியல் அனுபவங்கள் உங்களின் மனதில் பெரும் பெரும் அலைகளாக எழும்
ஒவவ்வொரு முறையும் அதிலிருந்து இப்படி இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்று முத்துகளைக் கொண்ட சிப்பிகளும் வந்துபோகும்.
அதனால் இன்றில் இருந்து எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கக் கூடாது என்று யோசிப்பதிலேயே நேரத்தை வீணடிக்காமல்
இப்படியெல்லாம் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற இறந்த கால அனுபவதை, தெளிவுகளை, நிகழ்காலத்தில் செயலாக்குங்கள் இறந்த காலம் நிகழ்காலமாகும்
வீணான நேரம் பொன்னான நேரமாகும்............

*******
ஒருவர் இன்னெருவரை முழுமையாக
புரிந்துகொள்வது என்பதெல்லாம் சாத்தியமே
இல்லாத ஒன்று.
**********
ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும்
அவரால் அவரை முழுமையாய் புரிந்துகொள்ளவே
முடியாது. காரணம் மனம் என்பது ஒரு புதிர்
**********
முழுமையாய் புரிந்துகொள்வது என்பது மனரீதியாகத்தான்
சாத்தியமற்ற ஒன்று.ஆனால், புரிந்துகொள்ளுதல் உணர்வு
ரீதியாக மிக எளிதான ஒன்றே. எனவே ஒரவரை ஒருவர்
முழுமையாய் புரிந்து கொள்வது என்பது நிச்சயம்
சாத்தியமான ஒன்றுதான்.
************
பேசும் வார்த்தைகளைவிட, பேசும்
தொனியில் உணர்வு ஒளிந்திருக்கின்றது.

முகபாவனையைவிட, கண்களுக்குள்
உணர்வு ஒளிந்திருக்கிறது.

செய்கைகளைவிட, செயல்களின் நோக்கத்திற்குள்
உணர்வு ஒளிந்திருக்கின்றது.

நானும் மற்றவர்களும் ஆனந்தமாய் இருக்கவேண்டும்.
அதற்கு என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்யவேண்டும்
என்ற நோக்கோடு இன்றிலிருந்து ஒவ்வொரு நிமிடத்திலும்
செயல்படுங்கள். நீங்கள் உணர்வுக்காரராக மாற ஆரம்பிப்பீர்கள்.

Wednesday, June 25, 2008

சிந்தனைச் சிதறல்கள்

எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொள்கின்றேன் ! ஏமாற்றங்களை சந்தித்தபின்!


கோபத்தை அன்பால் வென்றிடுக. பாசத்தை விவேகத்தால் வென்றிடுக..........
*****
பிறருக்கு தீங்கு விளை விக்காமல் இருப்பதே மானுடத்தின் உயரிய பண்பு
இந்தப் பண்பை வளர்த்துக் கொண்டால் வாழ்கை அமதி பெறும்.....
*****
நேர்மையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிரார்த்தை என்று தனியாகச் செய்ய வேண்டியதில்லை
*****
கருணையும் மன்னிக்கும் தன்மையும் சாந்தியும் நிறைந்தவனின்
இதயமே கடவுளின் உறைவிடம்
*****
இலட்சியத்தை அடிக்கடி மாற்றக் கூடாது. மாற்றினால் பிரகாசிப்பது வலுகடினம்.
ஆனால் அவசியம் என்றால் இலட்சியத்தை அடைவற்காக வழிமுறைகளை
பாதைகளை மாற்றிக்கொள்ளலாம்....
*****
உழைக்காமலேயே செல்வம் அதிகம் சேர வேண்டும்
என்பதற்காக எற்பட்டதல்ல இறை வழிபாடு...
*****
நீயும் நானும் திருந்தி விட்டால், உலகத்தில் உள்ளவர்கள்
எல்லோரம் திருந்தி விடுவார்கள்...
*****
உபதேசங்களில் எறும்பு செய்யும் உபதேசமே மிகச்சிறந்தது
என் பேன், காரணம் அது உழைப்பைத் தவிர வேறுறெதையும்
செய்வதில்லை...

******
வாசிப்பதற்கு நேரத்தை மிச்சம் பிடித்தால்
வாழ்நாளில் பலவற்றை அறியலாம்
*****
கண்ணாடி காயத்தை ஏற்படுத்தும் என்பது அறிவு
கண்ணாடி உடைந்து அது குத்தி காயம் வந்த பின்
வருவது அனுபம்........
*******
பேசுவது எது வானாலும் ஒரு முறைக்கு இரு முறை யேசி
எந்தப் பிரச்சனைக்கும் இது வோ முதல் தீர்வு....
*******
ஆபத்துக் காலத்திலேயே உண்மையான நண்பன்
உனரப்பட்டு இனம் காணப்படுகிறான்....
*****
தீய சொற்களை பேசுவதை விட
மெளனமாய் இருப்தே மேலானதாகும்..
*****
யாரிடம் உன் எண்ணங்களை
வெளிப்படையாக சொல்ல முடியுமோ
அவனே உன் நண்பன்....
*****
நீ ரசிக்கின்ற யாரையும் அருகில் போய் பார்த்துவிடாதே!
உன் ரசனை மீதே உனக்கு வெறுப்பு வந்துவிடும்!

Tuesday, June 24, 2008

கதைகள்

ஏமாற்றம்
*********

அவசர அவசரமாய் ஏற்பாடு, தொடர் தொடராய் வேலை ,நேரத்தின் பற்றாக்குறையாம், பத்துநாட்களில் வெளி நாட்டு மாம்பிள்ளை வருகிறார்.
அயலவர் கூடி அடுக்கடுக்காய் கேள்விகள் மகிழ்ச்சியின் உச்சத்தில் பேசினார் பெண்வீட்டார் கையோடு போகிறாள் கணவருடன் பெருமைகள் வேறு
என்ன வேலையாம் பக்கத்து வீட்டார் கேட்டனர் புகையிரத நிலையத்தில்
பெரிய வேலையாம் எல்லோருக்கும் இவர்தான் பெரியவராம்
கதைகதையாய் கூறினர் கேட்பவர்களும் பொறாமை கொள்ளும் வண்ணம் மாப்பிள்ளையும் வந்தார் திருமணமும் முடிந்தது பெண்ணவள் திரும்பவும்
கேட்டாள் என்ன வேலை என்று கணவர் சிரித்துக்கொண்டு காட்டினார்
இதோ பார் என் வேலைக்கான அடையால அட்டைதனை திருப்தியுடன் பெண்ணவள் கூடவே வந்தாள் மகிழ்ச்சியின் உச்சத்தில்
வெளியுலகம் தெரியாது சில நாட்களும் போக அயல் வீட்டாரும் வந்து வந்து போக தனிமையும் தொட அவளின் நண்பி வந்தாள். பார்பதற்காய்
அவளிடமும் அதேபோல் ஒரு அடையாளஅட்டையை பார்த்தாள்.
உடனே தன்னை மறந்து கேட்டாள், நீயும் புகையிரத நிலையத்திலா வேலையென அவளும் இல்லையென்றாள் அப்ப இது, இதுவா ? இது ஒருவருடம் பாவிக்கும் பிரயணச்சீட்டு என்றாள் அப்படியா சும்மா கேட்டேன
என்றாள் ஆனால் மெளனமாக அழுதது அவள் இதயம்
முதல் கண்ணீர் முதல் ஏமாற்றம் கண்டு