Monday, August 18, 2008

சிந்திக்கச் சிந்தனைகள்......

இனம் இனத்தோடு பணம் பணத்தோடும்......................

பணம் பணத்தோடு என்பதில் உண்மையில்லை. ஏற்கெனவே பணம் இருப்பதால்
மட்டுமே ஒருவனைப் பணம் தேடி வந்து விடாது.
ஆசைப் படுவதால் மட்டுமே ஒன்றை அடைந்து விட முடியுமா?
நிலவில் கால் வைக்க வேண்டும் என்று மனிதன் ஆசைப் பட்டான்.
அந்த ஆசை மட்டுமா அவனை அங்கே கொண்டு சேர்த்தது? அதற்கான முயற்ச்சிகளில்
அவன் முழுமையாக ஈடுபட்டான். நிலவையும் அங்குள்ள சூழலையும் புரிந்து கொண்டான்.
தன் திறமையைப் பயன்படுத்தி அங்கு செல்வதற்கான வாகனத்தையும் தயார் செய்தான்.
வெற்றி கண்டான்.
பணம் நிறைய வைத்திருந்தும், அதைப்பெருக்குவதற்கான திறமையை வளர்ந்து
கொள்ளக்கொள்ளாதவருக்கு மேற்கொண்டு பணம்கிடைத்துவிடாது.
பணக்காரனிடம்தான் பணம் சேரும் என்று சலித்துக்கொண்டு, முயற்சியில்
ஈடுபடாமல் இருப்பதற்கான இந்த சோம்பல் வார்த்தைகளை நம்பாதீர்கள். இன்று
பணக்காரர்களாக இருப்பார்கள் பலரும் இந்த வார்த்தைகளை நம்பிச் சோர்ந்து போகாமல்,
தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு சலிக்காமல் உழைத்ததால்தான் இந்த இடதை
அடைந்திருக்கிறார்கள்.
ஆசைப்படுங்கள். அடைவதற்கான திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்? அடையுங்கள்!



***************
நேரம் சரியில்லை என்றால் யானை மீது சென்றாலும் நாய்
கடிக்கும்..............

யானை மீது செல்லும்போது, நாய் கடிக்கும் என்றும் பயந்து கீழேயே
பார்த்துக்கொண்டு போனால், ஏதோ ஒரு மரக்கிளை உங்கள் மீது மோதலாம்,
கீழே தள்ளலாம்; அங்கே ஒரு நாய் மீது நீங்கள் விழ, அது மரணடு போய்
உங்களை கடிக்கலாம்.
இந்தச் சங்கிலித் தொடர் நிகழ்வுகளை தெய்வச் செயல் என்று சொல்லித்
தப்பிக்கப் பார்க்காதீர்கள்.
மரக்கிளை உங்கள் மீது மோதவில்லை. நீங்கள் தான் கவனமில்லாமல், மரக்கிளை
மீது மோதிக்கொண்டீர்கள்; நாய் மீது விழுந்தீர்கள். அறிந்து செய்தாலும்; அறியாமல்
செய்தாலும்; உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு இருக்கத்தான்
செய்யும். உங்கள் கவனமின்மையால் நேர்ந்த நிகழ்வை; நேரம் சரியில்லை என்று
என்று அதன் மீது பழி போட்டு மூடி மறைப்பது என்ன நியாம்?

உங்களைக் கடித்தது நாய் அல்ல; கவனமற்ற உங்களின் முட்டாள்தனம்தான்!
வாழ்கையில் மோசமான நேரம் என்பதே கிடையாது வாழ்வின் ஒவ்வொரு
கணமும் அற்புதம்தான்!



******************
வரும்பியது கிடைக்காதபோது கிடைத்ததை விரும்பு!...

இது முற்றிலும் தோல்வி மனப்பான்மையில் சொல்லப்பட்ட தத்துவம்.இதன்
கருத்து, இப்போது கிடைந்திருப்பதை விரும்பு! அதே சமயம் உன் சொந்த விருப்பதை விட்டுக்கொடுக்காதே! எனலாம்
விரும்பியது கிடைப்பதற் ஆசை மட்டும் போதுமானதல்ல; அதை பெறுவதற்கான திறமையும் முயற்சியும் தேவை. கிடைத்தை விரும்பாமல் வெறுக்கும் போது, அந்த அதிருப்பி உங்கள் திறனை மழுங்கச் செய்து விடும்.
பல விதங்களில் உங்களை முடக்கிப் போடும். விரும்புவதை நோக்கி முழுமையாகச்செயல்படவிடாமல் தடுக்கும்.
எனவே எந்த சூழ்நிழையில் இருந்தாலும், அதை விரும்ப கற்றுக்கொள்ளுங்கள்.
சொந்த வீடா? அதன் நிறைவை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.வாடகை வீடா?
வேண்டாமென்றால் உதறி விட்டுப் போகலாம் என்ற விடுதலை உணர்வை ரசியுங்கள்.
நீங்கள் ஆனந்தமாக இருக்கும் போது தான் ,உங்கள் திறன் உச்சத்தில் இருக்கும்.
விரும்பியது கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும்!

No comments: