Wednesday, December 2, 2009

முதுமொழி

பேச்சை விட மவுனமே சிறந்தது. பேசித்தான் தீர வேண்டுமென்றால், அப்பேச்சு, உண்மையாய், நேர்மையாய், இனிமையாய் இருக்கட்டும்.

குறைந்த பேச்சு ,நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை,
தம் கருத்தில் ஐய்யுறவு,பிறர் கருத்தில் மதிப்பு இவை
பின்பற்ற வேண்டியவை.
கோவம் கண்களை மறைத்து ஒளியை இருளாக்குகின்றது
கோவ இருளை அகற்றும் நிதான ஒளியை தரிசித்தால் நலம்

Monday, August 24, 2009

வாழ்கை ஒரு சவால்

வாழ்கை ஒரு சவால் _அதனைச் சந்தியுங்கள்!
வாழ்கை ஒரு பரிசு_ஏற்றுக்கொள்ளுங்கள்!
வாழ்கைஎன்பது வேதனை_ சமாளியுங்கள்!
வாழ்கைஎன்பதுதுன்பம்_தேற்கடியுங்கள்!
வாழ்கை என்பது கடமை_ நிறைவேற்றுங்கள்!
வாழ்கை என்பதுவிளையாட்டு_விளையாடுங்கள்!
வாழ்க என்பது மாயை_ விலக்கிப் பாருங்கள்!
வாழ்கை என்பதுபாட்டு_இசைந்துப் பாருங்கள்!
வாழ்கை என்பது ஆட்டம்_ ஆடிப் பாருங்கள்!
வாழ்கை என்பது தருணம்_ பயன்படுத்திப் பாருங்கள்!
வாழ்கை என்பது பயணம்_முடித்து வையுங்கள்!
வாழ்கை என்பது அன்பு_அனுபவிந்துப் பாருங்கள்!
வாழ்கை என்பது அழகு_ஆராதனை செய்யுங்கள்!
வாழ்கை என்பது சோதனை_கடந்து பாருங்கள்!
வாழ்கை என்பது போராட்டம்_ எதிர்ந்து நில்லுங்கள்!
வாழ்கை என்பது புதிர்_ விடுவித்து விடுங்கள்!
வாழ்கை என்பது லட்சியம்_அதை அடைந்து விடுங்கள்!
_விவேகாந்தர் சொன்னதில் சில................................

Friday, August 21, 2009

நான் ரசித்தவை...

அவள் அழகை என்னால்
வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாது ஒரு வயலின் தாருங்கள்
வாசிந்து காட்டுகின்றேன்...
.....
கலீல் ஜிப்பாரானின் கவிதை

Monday, July 20, 2009

சிந்தனைத் துளி........

கல்வி என்னுள்ளத்தில் உலக வாழ்கை எவ்வாறு நடைபெறுகிறது
என்பதற்கும் எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கும் மிடையே
கடுமையான போராட்டத்தை மூட்டிவிட்டது.


எதிர்காலத்தை நமக்கு எவரும் தடைசெய்ய இயலாது.

அன்பைக்கொடு,உதவியைக்கொடு,உன்னால் இயன்றளவு சிறிதேனும் கொடு
ஆனால் எதற்கும் விலைபேசும் பழக்கம் கூடாது.


நல்ல பண்பும் தூயநடத்தையும் இல்லாத உயர்படிப்போ,மேதாவித்தனமோ,
வாசனைத்திரவியத்தினைப் பூசி மணக்க வைத்திருக்கும் பிணத்திற்குச்சமமாகும்.


தவறுகளை ஒத்துக்கொள்ள தைரியமும்,அதனை திருத்திக்கொள்வதற்கான
பலமும் தான் வெற்றிபெறுவதற்கு சிறந்த குணாம்சமாகும்.

பிறர் செய்வதில் எது உனக்குப் பிடிக்கவில்லையே, அதை நீ மற்றவருக்கு செய்யாதே.


Saturday, June 13, 2009

உண்மை வெற்றிக்கு சில வழிகள்

*பணத்தை பூஜிக்காதீர்கள்
* தாரரள குணத்தை வளர்ந்துக் கொள்ளுங்கள்
* தாராளமாய் மன்னியுங்கள்
*கடவுளுடைய நெறிமுறைகளைப் பின்பற்றுங்கள்
*சுயநலமற்ற அன்னைக் காட்டுங்கள்
* ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருங்கள்
*நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்
* மிதமிஞ்சி உட்கொள்ளாதீர்கள்
*பழிக்குப் பழி வாங்காதீர்கள்
*கடினமாய் உழையுங்கள்
*பொன் விதியை பின்பற்றுங்கள்
*நாவைக் கட்டுப்படுத்துங்கள்

Friday, June 12, 2009

அன்பு ஓர் அருமருந்து

அன்பும் நெருக்கமும் நம்மை நோய்வாய்ப்படவும் செய்யும் குணமடையவும்
செய்யும், நம்மைச் சோகக் கடலில் மூழ்கடிக்கவும் செய்யும் ,இன்பமழையில்
நனையவும் செய்யும்.நம்மை நோகடித்து நொறுக்கவும் செய்யும்
நம்மைத் தூக்கி நிறுத்தவும் செய்யவும்.இதே தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு
ஒரு மருத்து கண்டுபிடிக்கப்பட்டால் எல்லா மருத்துவர்களும் நோயாளிகளுக்கு
அதையே சிபாரிசு செய்வார்கள். இத்தகைய மருந்தைக் கொண்டுக்காமல்
இருப்பது பெரிய குற்றமாகவே கருதப்படும்.

Wednesday, May 27, 2009

இன்றைய சிந்தனைச் சிதறல்

மிக மிக நல்ல நாள் _இன்று
மிகப்பெரிய வெகுமதி_மன்னிப்பு
மிகவும் வேண்டாதது_வெறுப்பு
மிகவும் பெரிய தேவை_சமயோஜித புத்தி
மிகக் கொடிய நோய் _போராசை
மிகவும் சுலபமானது _குற்றம் காணல்
கீழ்த்தரமான வி்டையம்_ பொறாமை
நம்பக்கூடாதது _ வதந்தி
ஆபத்தை விளைவிப்பது_அதிக பேச்சு
செய்யக்கூடாதது _உபதேசம்
செய்ய வேண்டியது _உதவி

அறிந்து கொள்ள வேண்டியவை

உருகும் உள்ளத்தில் உதிப்பது_ அன்பு
இறுகும் உள்ளத்தில் எழுவது _ அகந்தை
அன்பு விளைவிப்பது _ ஒற்றுமை
அகந்தை விளைவிப்பது _ வேற்றுமை
வருவதும் போவதும் _ இன்பம்,துன்பம்
போனால் வராதது _ மானம், உயிர்
தானாக வருவது _ இளமை,முதுமை
நம்முடன் வருவது _பாவம் புண்ணியம்
அடக்கமுடியாதது _ஆசை, துக்கம்
தவிர்க்க முடியாதது _பசி,தாகம்
நம்மால் பிரிக்க முடியாதது_பந்தம்,பாசம்
அழிவைத் தருவது _பொறாமை,கோவம்
எல்லோருக்கும் சமனானது_இறப்பு,பிறப்பு

Thursday, February 12, 2009

நந்தவனம்

சின்னதாய் யோசித்து பார்ப்போமா ?

*கணவனும் மனைவியும் சண்டை போட்டுக் கொள்கின்றார்கள்
என்பதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பதில்லை என்றாகி
விடுமா? இல்லவே இல்லை, ஏனென்றால் தம்பதியினர் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றார்கள்.இருந்தாலும் சில சமயங்களில் ஏன் சண்டை வருகின்றது.இப்படி சண்டை வருவதால் ஒருவரை
ஒருவர் புரிந்து கொள்ளாது மணவாழ்கை தனை முறிந்துக்
கொண்டு போகத்தான் வேண்டுமா என்பதனை சின்னததாய்
யோசித்து சின்னதாய் திருந்தினால் என்ன...............

*பொரும்பாலான தம்பதியினர் ஒருவர் மீது ஒருவர் அன்புடனும்
கனிவுடனும் நடத்தவே விரும்பினாலும் ,எல்லோரும் கருத்து
வேறுபாடு காரணமா, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
தங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து
வாக்குவாதம் செய்து பெரிதாக கத்தி கூச்சல் போட்டு
கெட்ட கெட்ட வார்தையால் திட்டி கடினமாக நடக்கின்றோமே
இப்படி நடக்கத்தான் வேணுமா ?இப்படி ஒருவரை ஒருவர்
காயப்படுத்துவதால் நாங்கள் எதை சாதிக்கின்றோம்.
என சின்னதாய் இருவரும் யோசித்து பார்த்தால் என்ன?

*கணவனும் மனைவியும் ஒரோ விதமான கருத்துக்களை
பரிமாறிக்கொள்வோம் என்று இல்லை, பெரும்பாலும்
இது நபருக்கு நபர் வேறுபடும். உதரணமாக, ஒருவர்
ஒருவிடையத்தை கூறும் போது விரிவாய் கூறவிரும்பலாம்
மற்றவர் அதனை சுருக்கமாக கேட்க விரும்பலாம், இதனை
புரிந்து கொள்ளாது சண்டை ஏற்படும் போது உங்களை புரிந்து
கொள்ள, உங்கள் மனதை சின்னாய் திறந்து ,சிந்திந்து சின்னதாய்
ஒரு தரம் யோசிந்தால் என்ன?இப்படி யோசிந்து வரும்
வாக்குவதை தவிப்பதற்காக ஒருவர் கலந்து பேசாது தவிர்க்கலாம்.
இதனையும் புரிந்து கொள்ளாது மற்றவர் விடப்பிடியாக
பேசமுயலும் போதும் அப்போதும் சண்டைவரலாம் இப்படி புரிந்து
கொள்ளாது கூட குடும்பங்களில் சண்டை வரலாம்
இதனை இருவரும் சின்னதாய் புரிந்து சின்னதாதய் யோசித்தால் என்ன?

*கணவனும் மனைவியும் வெவ்வோறு சுழலில் வளர்ந்தவர்களாக
இரு்ப்பதால் தங்களுக்குள் எப்படி பேசிக்கொள்ளவேண்டும்
என்பது குறிந்து வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருப்பார்கள் .
உதரணமாக, ஒருவர் அமைதியான வீட்டு சூழலில் வாழ்ந்து
இருப்பார் மற்றவர் கலகலப்பான வீட்டு சூழலில் வாழ்ந்திருப்பார்
இப்படியான வாழ்வியலில் இருந்து வரும் போது ஒருவர் தன்
மனம் திறந்து பேச தெரியாமல் தவிப்பார் .மற்றவர் தன்
மனம் திறந்து வெளிப்டையாக பேசுவார், இதனை புரிந்து
கொள்ளாது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு
ஒருவர் மேல் ஒருவர் கோவம் கொள்வதால் ஏற்படுபடும்
கருத்து வேறுபாட்டால் வரும் சண்டையை தவிர்ப்பதற்கு
சின்னததாய் மனம் திறந்து யோசிந்து பார்த்தால் என்ன?

Friday, February 6, 2009

சின்ன சின்ன தகவல்கள்.........

1.தன் பிள்ளைக்கு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் காப்பாற்றி
அரவணைத்துக் கொள்பவள் தான் சிறந்த தாய் என்று நினைத்தால்
தப்பு என்கின்றார் ஒர் அறிஞ்ர். அதாவது எந்த தாய் தனது
அரவணைப்போ ஆறுதலோ தேவையில்லாத அளவுக்கு தன்
பிள்ளைகளுக்கு தன் சொந்த காலில் நிற்கக் கற்றுக் கொடுக்கின்றாளே
அவளே சிறந்த தாயாம்...........................

2. மகிழ்ச்சியான குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்ந்து விடுகின்றார்களாம்
சண்டை சச்சரவோடு இருக்கும் குடும்பத்துச் சிறுவர்கள் உயரமாக வளர்வது
கிடையாதாம். உயரமாக வளர்வதற்கு தேவையான கார்மோன் சிறுவர்களின்
மகிழ்ச்சியால் அதிகமாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.......

3.சாதிக்க வயது தேவையில்லை 106 வயது பாட்டி கணினி முகாமில்
கலந்து கொண்டு பயிற்சி பெற்றிருக்கின்றார் (இந்தியாவின் கேரளா
மாநிலந்தில்) முயற்ச்சி இருந்தால் சாதிக்க வயது தடையில்லை
இன்றைய சாதனைகளுக்கு வயது அல்ல தடை மனசும் முயற்ச்சியும்
தான்.

4. பெண்ணுக்கு ஒரு ஆனை பிடிப்பதற்கு அவனது அக்கரை
அழகு உழைப்பு போன்ற விடையங்களை விட புதிதாய்
ஒரு விடையம் கண்டு பிடிக்கப் பட்டள்ளது. அதாவது
ஆன் பாவிக்கும் வாசனை திரவியங்களும் ஒரு காரணமாம்
இதற்கு அவர்கள் கூறும் விளக்கம், ஒரு பெண் வளரும் போது
அப்பாவிடம் நுகரும் வாசனையை ஒரு ஆணிடம் போது
அவளை அறியாமல் அவனை அவளுக்கு ரொம்ப பிடித்து போகின்றதாம்.
இதற்கு காரணம்
தன் அப்பாவிடம் உணரும் அந்த நெருக்கத்தை புதிய மனிதரிடமும்
அந்த வாசனை உணர செய்ய வைக்கின்றதாம் என்கின்றார்கள்.
அதனால் பெண்கள் கவனம் ஆண்கள் முயற்ச்சியுங்கள்.

5.உலகில் அதிகம் மக்கள் தொகை உள்ள நாடு சீனா
அந்த நாட்டில் மணப் பெண்ணுக்கு தட்டுப்பாடம் அங்கே
120 ஆண்களுக்கு 100 பெண்கள் தான் இருக்கின்றார்களாம்
சீனாவில் இந்த நிலமை என்றால் மற்றைய நாட்டில்
சொல்லவே வேண்டாம். ஆண்கள் எனி சீதனம் கொடுத்தே
திருமணம் செய்யும் நாட்கள் எனி வரபோகின்றதே தெரியவில்லை
அதனால் ஆண்களே யேசியுங்கள் அடுத்த 20 ஆண்டில் 2 கோடியே 30 லட்சம்
ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது
பெண்களே கவலை படாதீர்கள் சாமியாராய் போவதாக சொல்லி
ஏமாந்தும் ஆண்கள் எனி எதை சொல்லியும் ஏமாற்ற முடியாது.....

Wednesday, January 7, 2009

சிந்தனைச் சிதறல்கள்

பாரினில் எப்போதும் போரே வேண்டாம்

பாசம் இல்லாத இதயம் வேண்டாம்

சென்நீர் சிந்தும் மண்ணும் வேண்டாம்

சீரழியும் வாழ்வு சிறிதளவும் வேண்டாம்

பஞ்சம் நிறைந்த வாழ்வும் வேண்டாம்

பட்டினியில் பசித்திருக்கும் ஜீவனும் வேண்டாம்

பொய்யான பேச்சுக்கள் புகழ் மாலை வேண்டாம்

பொருந்தாத மணவாழ்வும் பிரிவுகளும் வேண்டாம்

பொய்யும் புரட்டும் பூமியில் வேண்டாம்

பொய்யுரை நடத்தும் போதகனும் வேண்டாம்

***************
1.உனது கரங்களுக்கு எப்போதுமே வேலை இருக்கட்டும்

2.உனது பணப்பையில் எப்போதுமே ஒன்று அல்லது
இரண்டு நாணயங்கள் இருக்கட்டும்

3.உனது இல்லத்தில் எப்போதும் சூரியக் கதி்ர்கள் ஒளிரட்டும்

4.உனது நண்பனின் உதவிக்கரம் உனக்கு அருகில் இருக்கட்டும்

5.ஒவ்வொரு மழைத்துளிக்குப் பின்னால் உனது வாழ்விலே
வானவில் பிரகாசிக்கட்டும்

6.உனது இதயத்தை எல்லாம் வல்ல இறைவன்
மகிழ்ச்சியால் நிறப்பட்டும்...

************
நேர்மையின் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒருவன்
பிராத்தனை என்று தனியாகச் செய்ய வேண்டியதில்லை

**********
தமிழை கற்றதால் வரும் பெருமைகள்

1.தமிழைக்கற்றவன் பாவ புண்ணியம் அறிவான்

2.தமிழைக்கற்றவன் ஞானி ஆவான்

3.தமிழைக்கற்றவன் கடவுள் ஆவான்

4.தமிழைக்கற்றவன் வாலை பூசை செய்வான்

5.தமிழைக்கற்றவன் நாத விந்துவை பூசை செய்வான்

6.தமிழைக்கற்றவன் பண்பாளன் ஆவான்

6.தமிழைக்கற்றவன் ஜீவான்மாவையும் பரமான்மாவையும் அறிவான்

7..தமிழைக்கற்றவன் சத்து சித்து ஆனந்தம் அறிவான்

8. தமிழைக்கற்றவன் உயிரையும் உடம்பையும் அறிவான்

9.தமிழைக்கற்றவன் எல்லாம் கற்றவன் ஆவான்

10.தமிழைக்கற்றவன் தமிழ் தான் உலகம் என்று அறிவான்

Saturday, January 3, 2009

நான் படித்ததில்... எனக்குப் பிடித்தவை

கணவன்-மனைவி விவாகரத்தை தேடியலைகின்றீர்களா நீங்களும் வாழ சில யோசனை !! தேடி பாருங்கள் கசப்பிலும் இனிப்பை!! கிடைத்தாலும் கிடைக்கலும்.............................

1.ரொம்ப மரியாதை வச்சிருக்கணும். கால் தொட்டு கும்பிடும் மரியாதை இல்ல
கணவன்-மனைவியின் விருப்பங்களை அலட்சியப்படுத்தாமல் ரசிப்பது தான்
மரியாதை
2. எப்பவும் கடுமையான வார்த்தைகளால் காயப்படுத்திக்க கூடாது. கூலான,
அன்பான வார்த்தைகள் சந்தோஷமாக இருக்கும்போது மட்டுமில்ல, சங்கடமான
சமயங்களிலும் பேசணும்.
3.நேரம் கிடைக்கும் போதெல்லாம் கட்டிப் பிடிக்கணும்,கிடைக்கும் ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் முத்தம் கொடுக்கணும்
4.சின்ன சின்ன வீட்டு வேலைகளைக் கூட இரண்டு பேரும் சேர்ந்து செய்யப்
பழகிக்கணும்.ரெண்டு பேரும் பேசிக் கொள்ள நேரம் கிடைக்கும்
5. சண்டை போட்டுக்கிட்டு மனக் குமுறலுடன் படுக்கைக்குப் போகவேண்டாம்
படுக்கப்போகும் முன்பு சண்டையை சுமூகமாக தீர்க்கணும்.
6. சந்தோஷமாக இருப்பதற்கு நேரம், காலம் பார்க்கவேண்டாம் எந்த
எந்த நிபந்தனைகளும் கூடாது. எப்ப விருபினாலும் மகிழலாம்.
7.உங்க நண்பர் பட்டியலில் கண்டிப்பாக கணவனே-மனைவியோ இருக்கணும்,
இல்லையா? உடனே உங்கள் நண்பர்களுக்கு கணவன்-மனைவியை அறிமுகப்படுத்துங்க.
8.தினமும் மதிய உணவை மட்டுமாவது சேர்ந்து சாப்பிடுங்க
9.டேட்டிங் ....கல்யாணமாகாத இளசுகள் புரிஞ்சுக்கறதுக்கா போவாங்க,
கல்யாணமானவங்க நெருக்கம் இன்னும் அதிகமாக போகணும்
10. காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்யாணத்துக்குப்
வாழ்கையில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அந்த
மாற்றங்கள் எதிர்கொள்ளத் தயார இருக்கணும்.
11. அன்பளிப்பு அன்பை வெளிக்காட்ட வாரம் ஒரு சின்ன பரிசு பொருளாவது
கொடுக்கலாமே
12 .நிறைய பேசுங்க, பேசவிடுங்க, பேசுறதைக் கேளுங்க...மனைவி பேசுவதை
பதில் சொல்லாமல் சும்மா கேட்டாலே அவங்களுக்கு அது பெரிய சந்தோஷம்
13.குற்றம் கண்டுபிடிப்பதே பொழப்பா எடுக்க கூடாது. கணவனோ மனைவியோ
ஏதாவது சின்ன தப்பு செய்திட்டா கண்டுக்க கூடாது..........
14. கணவன், மனைவி உறவு முறையைவிட வேற எந்த உறவு முறையும்
பெரிசு கிடையாது ஸோ ...வீட்டில் முதல் முக்கியத்துவம் உங்க
கணவனுக்கோ, மனைவிக்கோதான் கொடக்கணும் குழந்தை கூட ரெண்டாம்
பட்சம் தான்.
15. சிக்கென்ற உடல்வாகு, உற்சாகமான முகம்...40 வயதிலும் பராமரிக்கனும்
16.கல்யாணமாகி ரொம்ப வருஷமாகியும் ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள
காதல் குறையவில்லைன்னு காட்டிக்கணும். அவர் செய்யுற சின்ன விஷயத்தைக் கூட பாராட்டினால் தான் அந்த காதல் தெரிய வரும்.
17. பெரிய சண்டையில் முடியாதவரை எதைப் பற்றி வேண்டுமானாலும்
விவாதிக்கலாம்.
18. தினமும் இரவு நேரங்களில் சேர்ந்து ஏதாவது ஒரு சினிமா பார்க்கும் பழக்கம்
இருக்கா? இல்லனா உடனே பழகிக்கோக்க...ஒன்று சேர்ந்து நிறைய
விஷயங்களை பகிர்ந்துக்க நல்ல சான்ஸ்
19. இறப்பு மட்டும்தான் நமக்குள் பிரிவை ஏற்படுத்த முடியும்ங்கிற
நம்பிக்கை குடும்ப வாழ்கைக்கு நீங்க கொடுக்கின்ற 100 வீத உணர்வாக
இருக்க வேணும்
20.ஐ லவ் யூ! இந்த வார்தையோட மேஜிக் சொல்லிப் பார்த்தால் தான்
தெரியும்........................................