Monday, July 8, 2013

குறிஞ்சிமலர்....

வாணி அழகிலும் அறிவிலும் தன்னடக்கத்திலும் தன்மானம் காப்பதிலும் சிறந்தவள். ஆனால் வறுமை அவள் வாழ்வில் தடைக்கல்லாய் அமைத்தது. அப்பா குடிகாரன் என்பதால் அம்மா தள்ளியே வைத்துக்கொண்டாள் ஆனால் தன்மகளை யாரிடமும் கையேந்த விடாது  சின்னச்சின்ன வருமானத்தைத்
தேடிதேடி படிக்கவும் வைத்தாள் எப்பவும் உழைக்கும் அம்மாவை பார்த்தே
வளர்ந்ததால் அவளுக்கு அப்பாவில் பெரிதாய் பாசம் என்றஒன்றுஇல்லை
ஆனால் மற்றவர்கள் போல் அம்மாவைஅடிப்பதில்லை அது அவளுக்கு ஒர் நின்மதி.
வாணியின் வீட்டிற்கு பக்கதில் சிந்துவீடு வசதியிலும் வாழ்விலும் உயரத்தே இருந்தார்கள். ஆனால் வாணிமீது எல்லோரும் பாசம். தங்கள்  வீட்டுமகளைப்போலவே அவளையும்நேசித்தார்கள். வாணிக்கு சொந்தமும் உறவு சிந்துவும் அவளின் மூன்று அண்ணாக்களும் தான் எப்பவும் அவர்கள் வீட்டில் தான் நிற்பாள், வீட்டில் இல்லை என்றால் தாய் அங்குதான் தேடிப்போவாள் ,அப்பா இருந்தும் இல்லாத மாதிரி வாழ்ந்தாலும் .நன்றாக படித்தாள், நண்பியுடன் சேர்த்தே திரிவாள் இருவரையும் எல்லோரும் கிண்டல் அடித்தாலும் பிரியமாட்டார்கள்.நன்றக படித்தால் உயர்தர பரீட்சையில் வெற்றியும்அடைத்தாள்.ஆனால் மேலபடிக்காது நின்றுவிட்டாள் அம்மாவின் கஸ்ரம் அவளை மேல படிக்க விடாது தடுத்தது.சிந்துவின் தாய் தொடர்த்து படிக்கச்சொல்லி வற்புறுத்தியும் அவள் மறுத்துவிட்டாள். தாங்கள் படிப்பதற்கு உதவி செய்வதாக சொல்லியும் பிடிவாதமாய் மறுத்தே விட்டாள் உதவி என்றாலும் காரணமின்றி கிடைப்பது பிடிக்காமல்.நண்பி பெரிதாய் படிக்காத காரணத்தால்  அவளும் நின்றுவிட்டாள்
சிந்துவின் கடசி அண்ணாவிற்கு மட்டும்  எல்லோரைவிடவும் வாணியிடம் பிரியம் அதிகம். அதை யாரும் பெரிது படுத்தவுமில்லை.

சிந்துவின் மூத்தஅண்ணா வெளிநாடுசொல்ல அவரை தொடர்ந்து எல்லா அண்ணன்களும் சென்றுவிட இருவீடும் மகிழ்வாய் இருந்தது எப்பவும் சிந்துவின் பிறந்ததினம் வந்தால் வெளிநாட்டு பார்சல் வரும் அதற்குள் வாணிக்கும் கட்டிப்பாய்  ஏதோ ஒன்று இருக்கும் .ஆனால் யார் வைத்தது என்று சிந்துவிற்கு மட்டும் தெரியும் வாணியிடம் கூட சொல்வதேஇல்லை  ஏன்னென்றால் சிந்துவிற்கு வாணியை நன்றாக தெரியும் ,அதனால் பொதுவாக அண்ணாக்கள் வேண்டி அனுப்பியது என்று கூறுவாள்
.எப்படிதான் சிந்துவும் அவள் குடுபவும் பாசம் காட்டினாலும் அவளுக்கு தாய்யின் கஸ்ரம் தான் பெரிதாய் தெரித்தது ,கூலிவேலைக்கு போக வெளிக்கிட்டால் சிந்துவிடுவது இல்லை, அதனால் அவளால் ஒன்றும் செய்யமுடியாது இருந்தது .வாணிக்கே தெரியாது வாணியின்அம்மாவிடம் கொஞ்சபணத்தை கொடுத்து உதவிய வண்ணம் இருந்தாள் சிந்து, தோழி என்றாள் இப்படிதான் இருக்கவேணும் என்ற அளவிற்கு இருந்தனர்இருவரும்!!.

இந்த நேரத்தில் தான் முத்தஅண்ணவிற்கு திருமணம் ஆனது அதை தொடர்ந்து இரண்டாவது அண்ணாவிற்கும் முடிந்தது அவர் திருமணம் செய்ய வந்தபோது நண்பர்களையும் கூட்டிவந்தார், அவர்கள் எல்லோரும் ஒருமாதம் நின்றனர் ,அப்போ அங்கே போய்ப்போய்வந்த வாணியை அணைவரும் பார்தனர் ,அவிசியமின்றி அவள் யாரிடமும் கதைப்பதுவுமில்லை அடுத்தவர் விடையங்களில் அவசியமின்றி தலையிடுவதுவுமில்லை சிறு சிறு உதவிகள் செய்வாள். அங்கு அப்போது யாரும் கிண்டலடித்தால்.மெல்லிய புன்னகை மட்டுமே சோகம் கலந்து வரும், இதை எப்போதும் இருகண்கள் மட்டும்மௌனமாய் ரசித்துக்கொண்டது.யாருக்கும் தெரியாமல்!!

திருமணம் முடிந்து அணைவரும் சென்று சிலமாதங்கள் ஆனபின்னர் சிந்துவோடு இரண்டாவது அண்ணா கதைத்தார் என்னோடு வந்த சாந்தனை பற்றி எண்ண நினைக்கின்றாய் என்று சிந்து அவருக்கென்ன நல்லவர் தான் என்றால் .சரியென வைத்து விட்டார்.

சிந்துவிற்கு தான் மனசுக்கள் ஒரோ குழப்பம் என்னசெய்வது என்று தெரியாது அண்ணியிடம் ஒர்நாள் கதைக்கும் போது  விடையத்தைக் கேட்டாள். அதற்கு அண்ணி கூறியது வருத்ததை தந்தது  ஆனாலும் பதில் கூறாது யோசனையில் ஆழ்ந்தாள். கடசியில் தாயிடம் போய் அம்மா நம்ம சின்னண்ணாவை பற்றி ஒன்று சொல்வேண் கோவிக்க கூடாது என்றாள் அதற்கு தாய் இல்லை  சொல்லுங்க என்றாள் .இல்ல சின்னண்ணன் நம்ம வாணியை விருப்புகின்றார் அதை தெரியாது அண்ணாக்கள் அவர்கள் நண்பன் சாந்தனை பேசுகின்றனர் அது தான் என்றாள் தாய் சிறு நேரம் பேசாது இருந்து விட்டு சொன்னார் அவன்  பார்சல் அனுப்பும் போதே தெரியும் ஆனால் அப்பா சம்மதிக்க மாட்டார் அவரை பற்றி தெரித்தும்  கதைக்கின்றாய் இதை இப்படியோ விட்டுவிடு அவனும் அவளிடம் சொல்லவில்லை அவளின்மனதிலும் அப்படி இல்லை அதனால் குழப்பாதே அவர்கள் பேசிய பெடியனை பிடித்தால் செய்து வைப்போம் தாயுக்கும் இயலாத நேரம் ஒரு நல்லது நடத்தாள் அவளின் வாழ்வு நன்றாக அமைத்திடும் அல்லவா.இதை கேட்டதும் முதலில் சிந்துக்கு அண்ணாபாவம் என்ற எண்ணதால் கோவம் தான் வந்தது ஆனால் யாரிடமும் சொல்லி பயனில்லை என்பதால் மௌனமானாள்.

.தொடர்ந்தது பேச்சு நடந்தது இரு அம்மாக்களும் வாணியின் திருமணம் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தனர் அப்பா வாணிக்கு தேவையானதை தானே செய்வதாய் கூறினார் சிந்துவிற்கு போவம் தான் வந்தது அண்ணாவை விடடு போனால் போதும் என்று தானே செலவு செய்ய முன்வந்தாரோ என்று. நல்ல காலம் சாந்தனுக்கு அக்கா மட்டும் இருப்பதாக சொன்னார்கள்.வாணி நன்றாக இருப்பாள் என்று மனசு சொல்ல அண்ணாவை எண்ணிய கவலையோடு வாணியின் திருமணத்தை செய்ய எல்லோரும் ஒன்றாய்இணைந்தார்கள்

வாணிவீடு சின்னதாய் இருந்தால் எங்கள் வீட்டையை பெண் வீடாய் மாற்றி மாப்பிள்ளை வீட்டை அண்ணிவீட்டில் வைத்தோம்.என்றார் அப்பா
நாட்களும் நகர்ந்தது எல்லோர் முகத்திலும் சந்தோசம் வாணியில் முகத்தில் மட்டும் புதிதாய் என்றும் எல்லாத மகிழ்ச்சி கலந்த நாணம் காணப்பட்டது முதல்முதல் நான் வாணியை வித்தியசமாய் பார்தேன் ஆனால் மனதிற்குள் என் அண்ணாவிற்காய் அழுதும் கொண்டேன் கொஞ்கொஞ்சமாய் குறைந்த நாட்கள் மணிகளாய் நிமிடங்களாய் வரவாய் காதிருந்தது அப்பதான் வழமைபோல் கூட்டி வரபோனார்..

................கார் வந்து  வாசலில் நிற்கும் சத்தம் கேட்டததும் சிந்து தான் முதல் ஓடினால் அவர்களை பார்பதற்கு ஆனால்
 அதிர்ந்த விழியோடு கல்லாய் நின்றாள் ,காரில் இருந்து இறங்கும்
 நபரை பார்த்ததும்.  அம்மாவின் குரல் கேட்டும் கேட்காமல் அசையாது
 நின்றாள் .பதில் இல்லாத காரணத்தால் தாயும் வெளியில் வந்தாள்
 அவளின் கண்ணையும் ஒரு நிமிடம் நம்ப முடியாது போக தடுமாறியோ
 போனாள்  தன் மகனை பார்த்ததும்  அந்த நெடியோ அத்தனை
 விம்பமும் திரையாய் ஓடியது அவள் விழிகளில்..எல்லோரும் அதிர்ந்தவிழியோடு மாப்பிள்ளையை தேட காரில் மாப்பிள்ளை இல்லை...
அவர்கள் மனதை புரிந்த ரகு தாயை பார்த்து கேட்டான்  அம்மா என்ன என்னை பார்த்தால் மாப்பிள்ளை போல் தெரியவில்லையா என்று அவனை தாய் திரும்பி பார்பதற்குள் அங்கு வந்த வாணியோ சொன்னாள் யார் இல்லையென்றது இப்போ நீங்கள்  மிகவும் அழகாய் இருக்கின்றீர்கள் எந்த பெண்ணும் மயங்கிவிடுவாள் உங்களை பார்தால் என்றாள் அதற்குள் அப்பா சரிசரி வாசலில் நின்று தானா பேசவேண்டும் முதலில் உள்ளோ போங்கள் என்றார்.

சிந்துவிற்கு தான் தலைசுற்றியது நடப்பது புரியாது  எல்லோரும் போய்விட்டது கூடதெரியாது அப்படியோ  நின்ற சிந்துவின் கைகளை பாசத்தோடு தமையனின் கரம் அணைத்து சொன்றது. அவளை உணர்ந்தவன் மெல்ல சொன்னான் நான் தான் வாணிக்கு தாலி கட்டபோகின்றோன் இப்போதைக்கு யாரிடமும் சொல்லாதே என்று.தமயனின் கதையை கேட்டசிந்துவிற்கு மயக்கமே வந்தது .ஏதையோ எண்ணிக் கோண்டு திரும்ப வாணி தேனீரோடு அருகில் நின்றாள் அதனை வாங்கி ரசிந்து குடிந்துக்கொண்டு இருந்தவனை அதிர்ச்சியோடு பார்த்தபடியிருந்தவளை தாய் கூப்பிட எழுந்து போனாள்....................ஆனாலும் அண்ணாவிடம்       இப்போ        எப்படியாவது உண்மையை கேட்கவேண்டும் .வாணிக்கு யார் மாப்பிள்ளை பாவம் அவள் எதுகும் தெரியாது  மகிழ்ச்சியாய் திரிகின்றாள்  எப்போ சாந்தன் வருவார் என்றபடி யோசனையில் போனவளை தடுத்துபிடித்தாள் வாணி என்ன சிந்து அண்ணா எவ்வளவு காலம் சென்று வீடு திரும்பியுள்ளார் நீ எப்பவும் போல் இல்லாது எதையோ பறிகொடுத்தவள் போல் திரிகின்றாய் என்று முடிப்பதற்குள் சிந்து உணர்ச்சிவாசப்பட்டு அப்படியொன்றுமில்லை உன் திருமணம் மிகவும் சிறப்பாக உனக்கு பிடித்தவரோடு நடக்கவேணுமல்லவா அதுதான்  யோசனை என்றாள். என்ன வரவர நீ பாட்டிமாதிரிபேசுகின்றாய் என்று கிண்டல் அடித்து சிரித்த சிரிப்பு ஓர் நெடி எங்கோ அலைமேதிய போல் ஒர் உணர்வைஅந்த சிரிப்பில் எழுப்பிஓய்ந்தது. அதனை ரசித்த படி ரகு சொன்னான்  எவ்வளவு அழகான சிரிப்பு உன் சிரிப்பு என்று !!அப்படியே சும்மா விடாது சிந்துவை வம்பிற்கு இழுத்தான்  வாணியின் சிரிப்பை  ரசித்துக்கொண்டு இருந்தால் பசிக்காது என்றாலும் வாணி என்னோடு வருவதால் எப்பவும் ரசிக்கலாம் தானோ .இல்லையா  சிந்து  என்றான். தமையனை பார்க்க அங்கோ வந்த அப்பா கூறினார் அவள் குப்பையில் பிறந்தாலும் ஒர் அற்புத பொக்கிசம் அவள் வாழும் இல்லம் என்றும் உயிர் உள்ள ஒர் அழகிய  ஒளியாய் விளங்கும் .அப்போ சிந்து!! அப்பா நான் என்றாள் என் மகள் வாழும் இல்லம் அமைதியாய் இருக்காது கலகலப்பாய் இருக்கும் ஆனால் கணவன் தான் பாவம் என்றார் பரவாய் இல்லை அப்பா உங்கள் தங்கையின் மகன் தானோ அவன் இங்கு பிறத்தாலும் அங்கு வளர்த்ததால் சமாளித்து விடுவான் யோசிக்காதீங்க  சிந்து செல்லமாய் கோவித்து கொண்டுபோக தாய் மகளை பிடித்து அணைத்தபடி எப்பவும் வீட்டில் உள்ளவர்களு அவளை வம்பிற்கு இழுக்காது விட்டால் நித்திரை வராதே என்றார்.ஒரு மாதிரி எல்லோரும் ஒன்றாய் சேர ரகு தன்னறைக்கு அழைத்து சென்றான்.

..........அங்கு அவர்களுக்காக வேண்டி வந்தனை எடுத்து கொடுத்தான் அவை யாரின்  மனதிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது விட்டாலும். வாணி மட்டும் மகிழிவின் உச்சத்தை அடைத்தால் சின்ன வயதில் இருந்து வாணிக்கு  சின்னதாய்  சிம்பிலாய் போடுவதில் விருப்பம் ஆனால் அவர்களிடம் வசதியில்லாத காரணத்தால் அதை நினைத்து ஏங்குவது இல்லை அந்த கற்பனைக்கு உயிர்கொடுத்து ரகு வேண்டி வந்து இருந்தான் அவளின் ஆச்சரியவிழிகளை பார்த்த சிந்து அதை பறித்து கழுத்தில் அணிந்து விட்டாள் வாழ்வில் முதல்முதல் வாணி விரும்பியணித்த நகையென்றால் அது ரகு கொடுத்தது தான்.

ரகு இன்னும்ஒரு பாசலை எடுத்து இது கல்யாணபெண்ணிற்கு மாப்பிள்ளையும் நானும் வேண்டியது என்று கொடுத்தான் அதை ரகுவின் தாய் தான் வேண்டிபிரித்து பார்த்தாள் அதற்குள் பட்டுச்சாறி தாலிக்கொடி மற்றும் நகைகள் இருந்தது அதை அணைவரும் வேண்டி ஆவலோடு பார்க்க என்ன வாணிக்கு இரண்டு மாப்பிள்ளையா நீங்களும் வேண்டி வைத்திருக்கின்றீங்க சாந்தன் அண்ணாவும் வேண்டிவந்திருக்கின்றார் என்றாள் சிந்து  அதற்கு வாணியின் தாய் சிரித்துக்கொண்டு தாலி ஒன்று தானோ சிந்து அதனால் மற்றவைகளை பார்த்து  தேவைக்கேற்ப மாற்றுவோம் என்றார் அங்கு நின்ற சிந்துவின் அப்பா ரகுவைத்திட்டினார் முதலோ சொல்லி இருந்தா நாங்கள் அவளுக்கு தேவையான வேறு பொருளை வேண்டியிருக்கலாம்
 .இல்லை அப்பா நாங்கள் திடிர் என்றுதான் முடிவு எடுத்தோம் அது தான் அப்பா சாந்தனுக்கு இதில் பெரிதாய் விருப்பம் இல்லை நான் தான் வேண்ட சொன்னோன் அங்கு சாறி பெரிதாக வேண்ட முடியாது அதனால் வாணிக்கு எல்லாம் தேவைதான் என்றான் சரி சரி எனி கதைத்து என்ன செய்வது தாலிக்கு பொன்னுருக்க நாளைக்கு நாள் எடுத்தால்  சாந்தனும் வந்திடுவார் மற்றவேலைகளை பார்க்கலாம் என்றார்.
.........................சரியென அணைவரும் தங்கள் வேலைகளை தொடங்கினர்  சற்று ரகுவின் வருகையால் தாமதித்த கல்யாண கலகலப்பு மீண்டும் சூடுபிடிக்க வீடு கலகலப்பானது அக்கம் பக்கம் எல்லாம் வாணியின் சந்தோஷத்தில் பங்குகொள்ள  தேடிவந்து கொண்டு இருந்தது. ஊரில் எந்தணையோ பெயர்கள் இருந்தாலும் எல்லோரும் பாசம் காட்டும் ஒருவராய் வாணிதான் இருந்தாள். அடிக்கடி பாட்டிசொல்வாள் விரோதியோ இல்லாது எல்லோரும் நேசிக்கும் உன்னில் அந்த கடவுளோ வாழ்வதாய் பார்க்கின்றேன் என்று. இதை கேட்டதும் வாணி கிண்டலாய் சொல்லி விட்டு போவாள் என்னையும் மஞ்சல் தண்ணீர் ஊற்றி வேப்பமரதிற்கு அடியில் வைத்துவிடாதீர்கள் என்று இறையிடம் பாசமும் பத்தியும் நிறையவோ இருந்தாலும் மற்றவர்களை போல் பெரிதாக அலட்டிகொள்வது இல்லை மனசு எப்பவும் அலுக்கில்லாது இருந்தால் போதும் என்பாள்
மற்றவர்களை துயரபடுத்தி பார்க்காது மற்றவர்கள் துயரங்களை தன் துயரங்களாய் எண்ணி துடைக்க நினைப்பது தான் இறையன்பு என்பாள்.....
இப்படி அடிக்கடி நண்பிகளுக்கிடையில் சண்டைவந்திடும்  சிந்து பணதோடு பிறந்ததாள் அவளுக்கு நிறைய உணர்வுகள் புரியாது. வாணி சிந்தும் விழிகளுடன் வாழ்வதாள் மற்றவரின் சின்னவிடையம் கூட பெரிதாய் தோன்றும். ஆனால் வாணிக்கு வரமாய் கிடைத்தது சிந்துவின் பெற்றோர்கள் இப்படி பெற்றோர்கள் அமைந்தால் எந்த குழந்தையும் வறுமையில் வாழாது....
அப்படியொறு பாசம் வாணியில்!! கோவத்தை கூட சிரிப்போடு காட்டி கண்டிப்பது ரெம்பவும் பிடித்தது வாணிக்கு.......................

வெளியில் சென்ற அப்பா வீடு வந்ததும் வராததுமாய்  ரகு நாளை சாந்தன் மதியம் வந்து விடுவார் தானோ என்றவாரோ வந்தார்  ரகு ஆமாம் என்றான்
சிந்துவின் அம்மா என்ன விடையம் என்று கேட்க நாளைக்கு பந்தல் கால் நட்டுபின்னோரம்  பொன்னும் தாலிக்கு உருக்கி விடலாம் என்றார்  என்ன அவசரபடுகின்றீங்க என்று கேட்க அப்ப மாப்பிள்ளை தாலிகட்டியதும் வாணியோடு கொஞ்ச நாள் கூட நிற்காது அப்படியோ போவதா சின்னச்சிறுசுகள் கொஞ்சநாளாவது சேர்ந்திருக்க வேணாமா என்றார்
அதுவும் சரிதான் சிந்து நீபோய் பக்கத்து வீட்டு லட்சுமி பாட்டிக்கு சொல்லி விட்டு வா நாளைக்கோ நல்ல நாளாம் பலகாரம் சுடவேணும் என்று  சரியம்மா என்று கூறியவள் வாணி வா என்றாள் எனி வாணி எங்கும் வரமாட்டாள் நீங்க போய் வாங்க என்றாள் சரியெனச் சொல்லி சென்றாள்
 சரி சரி சிந்து உன் திருமணதின் போது எல்லாம் வாணி செய்வாள் போய்வா என்றான் ரகு
திரும்பி பார்த்தவள் என்ன அர்த்ததில் சொல்லுகின்றான் என்று தெரியாது மௌனமாய் சென்றாள் நாளைக்கு தேவையான சாமான் பட்டியல் போட்டனர் வாணியின் தாய் கவலையாக சொன்னார் தகப்பன் செய்யவேண்டியது அவர் எந்த அக்கரையும் இல்லாது திரிகின்றார் வளர்த்த கடனுக்காய்  நீங்கள் கஸ்ரபடுகின்றீங்கள் என்றார். சரிவிடுங்கள் எங்களுக்கு சிந்து வேற வாணி வேற இல்லை  அவளை பெற்றது நீங்கள் என்றாலும் வளர்த்தது நாங்கள் தானே சிந்துவிற்கு ஒரு சகோதரி இல்லை என்று யாரும் நினைத்தது இல்லை சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரத்தில் கண்டதையும் நினைத்து குழம்பாமல்.
.....இரவு பெரியவர்கள் பேசிகொண்டு இருக்க வாணியும் சிந்தும்  நேரத்தோடு நித்திரைக்கு சென்று பேசிக்கொண்டோ உறங்கி போக விடிகாலை சேவல் எழுப்பியது  வாணி எழுந்து விட்டாலும்  அப்படியோ எதிர்கால கனவில் கற்பனைகுதிரையோடு  படுத்திருந்தால் மணித்துளிகள் சென்றது தெரியாது இருந்தவளை தாய் வந்து கதவை தட்டி எழுப்பினா வாணி மாப்பிள்ளை வந்து விட்டார் உன்னை தேடுகின்றார் .
குளித்து விட்டு வா என்றார் அதை கேட்டுக்கொண்டே சிந்து எழும்பினால் அறையை விட்டு வெளியில் வந்தவளுக்கு நண்பர்களின் சிரிப்பும் கதையும் கேட்டது கொஞ்சம் அச்சம் கொஞ்சம் பயம் உள்ளுக்குள் தட்ட மெல்ல நடந்து கிணற்றடிக்கு போனால் அதை பார்த்த சிந்துவின் அப்பா கிண்டலாக பேச உள்ளிருந்த நண்பர்கள்  வெளியில் வந்தனர் வாணிக்கு உடல் கூனி குறுகியது
உடனோ சாந்தன் வாணி தண்ணீர் எடுத்து தரவா என்றான் வாய் வார்த்தையின்றி நிக்க தலை வேண்டாம் என்றது உடனோ ரகு சொன்னான் அப்பா மாப்பிள்ளையை வீட்டில் வைத்திருப்பது சரிவராது நான் சாப்பிட்டதும் அண்ணிவீட்டில் விட்டு விட்டு வருகின்றோன் என்று அது தான் சரி என்றார் அப்பாவும் சாந்தன் கோவமாய் ரகுவை பார்க்க ரகு கண்ணடித்தான்
அதற்குள் அவசர அவசரமாய் குளித்து விட்டு வாணி அறைக்குள் போய்விட்டாள் ரகும் சாந்தனும் குளிக்க சென்றனர் .................................
                                     அம்மா வந்து சாப்பிட அழைத்தார் எல்லோரையும் அடுப்படி வேலை எல்லாம் வாணியின் அம்மா தான் செய்தார்  எல்லோரும் சேர்ந்து சாப்பிட போக வாணி மட்டும் வெளியில் வரவில்லை சாந்தன் வாணியின் அறைக்குள் போனான் வாணியின் உடல் நடுங்கியது சாந்தன் என்ன வாணி இப்படி என்னை கண்டு ஒடினால் நான் பாவம் இல்லையா என்றவன் வாணியின் கழுத்தில் கிடந்த நகையை பார்த்து விட்டு அப்பவோ ரகு சொன்னான் நான் தான் யோசிக்கவில்லை என்றான் வாணி பதறிபோய் என்ன என்றாள் நீங்கள் பெரிதாய் நகை அணிவதில்லை என்று ரகு சொல்லி இதை வேண்டினான் நான் தான்யோசிக்காது அப்படி வேண்டி விட்டேன் என்று வருந்தமாக கூற இல்லை நீங்கள் வேண்டியது பிடிந்தது அதை வெளியில் போகும் போது போடுகின்றேன் இதை வீட்டில் போடுகின்றேன் என்றாள் சாந்தன் முகம்மலர ரகு என்ன டா மச்சான் எங்க வீட்டு பெண்ணோடு கதையென்றான் சரி இன்னும் எந்தணை நாளைக்கு என்று கூறிவிட்டு ரகுவின் கையை பிடித்தபடி சொல்ல வாணி மனதிற்குள் வேண்டி கொண்டாள் இந்த நட்பு என் உயிர் உள்ளவரை பிரியாது இருக்க வேண்டும் என்று
                                               கட கடவென வேலைகள் தொடர மாப்பிள்ளை வீட்டுக்கும் பெண்வீட்டுக்கும் கலகலப்பாய் ஆட்கள் அங்கும் இங்கும் என்று திரிய ரகு சாந்தனோடு அங்கோ தங்கிவிட்டான் இங்கே அப்பாவும் அங்கோ மகனும் கவனித்து கொண்டனர் விடிந்த பொழுது சுபவேளையாய் விடிய திருமணநாள் சுபமாக கோயில் மண்டபவத்தில் தொடங்கியது ..........
விடிந்தும் விடியா பொழுதில் ஒர் இன்ப அதிர்ச்சி யாய் அணைவருக்கும் தெரியாது அங்கோ திடிர் என்று ரகுவின் மூத்த அண்ணாவும் அண்ணியும் வந்து சேர்ந்தனர். அணைவரும் இரட்டிப்பு மகிழ்ச்சி அவர்களை வரவேற்க வந்த வாணியின் நாணம் கலந்த வெட்க பார்வையை ரசிந்த அண்ணி சொன்னார்!! வாணியை முதல் முதல் தங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்ந்தவர் ,இவர் தான் என்றும் அவளை சிந்துவை போல் பார்த்து கொள்ளுங்கள் அம்மா என்று சொன்னாராம்-ஏதோ ஒர் பாசம் அவளிடம்  மட்டும் என்றாரார்  அதை விட அவள்  வந்த நேரம் தான் எங்கள் வாழ்வில் நிறைய மாற்றம் வந்தது பணம் இருந்தும்  இல்லாத ஒர் சந்தோஷத்தை தந்தவள் அவள் தான் அதனால் வாபோய் வருவோம் என என்னையும் அழைத்து கொண்டு வந்து விட்டார்
என்று கூறிமுடிப்பதற்குள் வாணி ஓடிவந்து பாதம் வணங்கி கண்ணீரால் அவர் பாதம் கழுவி யெழுந்தால் இறுக கட்டியணைந்தவர் வாணியின் கண்ணீர்துடைத்து அவளை தாய்யிடம் கொடுத்து விட்டு தங்களை தயர்படுத்த சென்றுவிட்டார் அன்று தான் அவர் அழுதையும் எல்லோரும் கண்டனர் அப்படி என்னதான் இந்த பெண்ணில் உள்ளது அந்தனை இதயங்களையும் ஒரு பார்வையிலோ தன்வசம் படுத்திவிட என எல்லோரும் கேட்பது வழக்கம். சிந்து வாணியின் கண்ணீரால் அழிந்த முகத்தின் அழகை சரிசெய்ய தனியறைக்குள் இழுந்து சென்றாள்....
   இந்த செய்தியை ரகுவிற்கும் சாந்தனுக்கும்சொல்லி அனுப்பினர் உலகில் வரமாய் பிறப்பது அரிது வறுமையில் பிறந்தாலும் சிறப்பது அரிது ஆனால் இந்த  மலருக்கு மட்டும் எல்லாம் அமைத்தால் தாய் பெற்றதன் வலிதனை இப்போது தான் மறந்து  உண்மையாய்சிரிக்கின்றாள் தன் மகளை  நினைத்து...
  நேரம் நல்லதை சொல்ல மாப்பிள்ளை வர ஐயர் தன்கடமைதொடங்க அண்ணாவோடு அண்ணி ரகுவோடு சிந்து அம்மாவோடு அப்பா  தன்வேதணை மறந்து பெற்றவர்கள் சுழ்ந்து நிற்க தாலி மலரின் கழுத்தில் மலர்மழையின் நடுவோ கொடிமேளசத்தின் ஒலியோடு ஏறியது அது பெண்ணின் கழுத்தில் ஏறும் !சந்தோஷகயிறா இல்லை கழுதை அறுக்கும் தாம்புக்கயிறா....................................................என கட்டியவர்கள் பலர் கேட்க மணப்பெண்ணும் மணமகனும் சந்தோஷநிமிடத்தில் தங்களை மறந்து நிற்க அவ்வளவு நேரமும் தனியோ விட பட்டஇருவோடும் அண்ணனும் தங்கையும் சேர்ந்தனர் ரகுவின் கிண்டல்பேச்சு உறவுகளின் சந்தோஷபேச்சு சிந்துவின் கவலை எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்களை வலம் வர தொடர்ந்து நிகழ்வால் அணைவரும் களைத்து ப்போய் வீடு சொல்லும் வரை தொடர்ந்தது வீட்டிற்குள் வந்ததும் வாணிக்கும் சாந்தனுக்கும் ஒதுக்கிய அறைக்குள் சிந்து விட்டு வர ரகு  இரண்டு கையிலும் தேனீர் கொண்டு வந்தான் அட...டா  என்ன அக்கரை என்றாள் சிந்து ரகு சொன்னான் இது அவர்களுக்கு இல்லை நானும் நீயும் தான் வேலை செய்து களைத்து விட்டோம் அதனால் வா குடிக்காலம் என்றதும் வாணி சிரிக்க அப்பா கல்யாணபொண்ணு இப்பதான் கொஞ்சம் பயம் இல்லாது சிரிக்கின்றான் ...எனி சாந்தனுக்கு பரவாய் இல்லை என்றான் உண்மையில் தண்ணீர் தாகமாய் தான் இருந்தது அணைவருக்கும் ஓரோ ஆட்களாய் இருந்தால் ஒன்றும் குடிக்கவில்லை வாணி ஒரு கப்பை வேண்டி சாந்தனும் வாணியும் பாதி பாதி குடிக்க ஒன்றை சிந்தும் ரகுவும் குடித்தார்கள் உடைமாற்றி வந்த அண்ணனும் அண்ணியும் வந்து என்ன அவளை அப்படியோ விட்டு வீட்டீர்கள் உடைகளை மாற்ற விட்டால் தானோ  அவளுக்கும்  சுற்றி விட்ட பாரம் குறையும் என்றார். உடனோ சிந்து  தன்னறைக்கு கூட்டி சென்றாள் உடைகளை மாற்ற எல்லோரும் சிந்து வின்  அறையில் இருந்து சாந்தனோடு  கதைத்துக் கொண்டு இருந்தனர்...

நேரம் நகர அவர் அவர் களைப்பால் தங்கள் தங்கள் சாப்பாட்டை முடிந்துக்கொண்டு நித்திரைக்கு சொல்ல வாணியும் சாந்தனும் தனிந்து விட பட்டனர். வாணிக்கு தனிமை பிடிந்திருந்தாலும் கொஞ்சம் அச்சம்கலந்த பயம்
கூடவோ  ஒட்டிக்கொண்டது...
             அறையில் இருந்து வெளிய வந்த சிந்து ரகுவை பிடிந்து இழுத்து சென்றாள் தன்னறைக்கு  என்ன என்ற கேள்விக்கும் பதில் கூறாது.
அறைக்குள் சென்றவுடன் ரகு கேட்டான் என்ன சிந்து இப்பயாவது சொல்லன் ஏன் இப்படி இழுத்து வந்தாய் என்று  உங்கள் மனதில் என்ன உள்ளது ஏன் வந்தவுன் அப்படி கூறினீங்க  எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாள் ரகு சிரித்து விட்டு சொன்னான் மக்கு எனக்கு வாணியை பிடித்திருந்தால் அவள் நிழலைகூட எவனும் தொட முடியாது வாணியை என் உயிரை விடவும் பிடிக்கும் ஆனால் அவளை மனைவியாகவோ காதலியாகவோ ஒரு நாளும் நினைத்தது இல்லை எனக்கு அம்மா போல் அவளும் சாந்தன் அண்ணா அண்ணி எல்லோரும் முதல் என்னிடம் கேட்டார்கள் நான் சரி சொன்ன பின்னர் தான் உங்களோடு கதைத்தார்கள் சாந்தன் எனக்கு நண்பன் வாணி எனக்கு தாய் இது தான் உறவு நீங்கள் நினைப்பது போல் எனக்கோ அவளுக்கோ காதல் இல்லை  எப்படி சிந்திதாலும் என் வாழ்வை மாற்றியமைத்தவள் எனக்கும் அறிவு உண்டு என்பதனை எனக்ககோ புரியவைத்து  என் வாழ்வை இன்று உயருக்கு கொண்டு சென்றவள்  உன்னை போல் தான் அவளும் சும்மா உன்னை சீண்டி பார்தேன் அவ்வளவு தான்  சரி நேரமாகின்றது போய் நித்திரை கொள்ளுங்க என்று கூறி சென்று விட்டான் அந்த பதில் சிந்துவிற்கு நின்மதியை தந்தாலும் ஏதோ சிந்தனை தொடர படுகைக்கு சொன்றாள் .......................
                                               வாணியை பார்த்து சாந்தன் இங்கு தொடர்ந்தான்  என்ன வாணி இன்னும் பதில் சொல்லாது அப்படியோ நின்றா என்ன சொல்லுங்க என்ன பயம் என்னிடம் இல்லை என்றாள் பயப்பிடவேண்டாம் உங்களை பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு தான் விரும்பி வந்தேன் உங்கள் அப்பா மாதிரி நான் குடிகாரன் இல்லை உணர்வுகளை புரியாது நடந்து கொள்ள எனக்கும் அக்கா மட்டும் தான் எனக்கும் சின்னவயதில் இருந்தே அம்மா அப்பா இல்லை தனியாக தான் படித்து வளர்ந்தேன் எனக்கும் கவலை வேதணை எல்லாம் தெரியும் நான் இன்னும் கொஞ்ச நாள் தான் இருப்போன் என்னோடு முதல் பயம் இல்லாது உறவாடுங்கள் நாமக்கு இங்கு எந்த உறவும் வேண்டாம் அது எனக்கு விருப்பவும் இல்லை கொஞ்ச நாள் உங்களோடு சேர்ந்து இருந்து விட்டு உங்களை விட்டு போய் மாத கணக்காய் அதற்காக எங்கி தவிந்து காத்திருக்க வேண்டாம் .முதல் நன்றாக புரிந்து கொள்ளுங்க என்னை!!

உங்களுக்கு இப்பதான் 21 வயது நிறையவோ காலம் இருக்கு எனக்கு உங்கள் அன்பு எப்பவும் குறையாது வேண்டும் நீங்கள் அழுதது எல்லாம் போதும் எனி வாழும் என் வாணிக்கு உண்மையான புன்னகை வேண்டும் அதற்காக நான் இருக்கின்றேன் என சாந்தன்சொல்ல சொல்ல வாணி மெல்ல மெல்ல அவன் பக்கம் சாய்ந்தால் அதில் ஒர்நம்பிக்கை இருந்தது  தன் சந்தோஷத்தை மட்டும் நினைத்து வாழ்ந்த ஆணைபார்த்த வாணிக்கு முதல் முதல்  உண்மையான அன்பின் மதிப்பு புரிந்தது அவர்களுக்கு இடையில் எதுகும் நடைபெறவில்லை ஆனால்
சாந்தன் என்ற ஆண் வாணிக்கு ஆணுக்குள் ஒர் வித்தியாசமான மனிதனாய் தெரிந்தான் திருமணம் என்றாலோ இரண்டு உடல் இணையும் பந்தம் என்ற கருத்தை சற்று மாற்றி அதற்கும் மேல் ஒர் அற்புதசொந்தம் உள்ளதை உணர்ந்தாள் . வாணிக்கு மிகவும் பிடித்திருந்தது முதல் முதல் தன் உணர்வை மதித்து அதற்கும் சம்மதம் கேட்டு  அவன் நடந்து கொண்டது இன்னும் பிடிக்க உண்மையான  சந்தோஷத்தோடு அவன் மார்வில் தலைசாய்ந்து படுத்துக்கொண்டாள் உடல் மனம் எல்லாம் நின்மதியானது........
                                                          வாழ்கையில் பலர் கூறிக்கொண்டு தான் இருக்கின்றனர் ஆனால் எதையும் விட்டுக்கொடுத்து வாழ பழகிகொள்ளவில்லை ஆனால் சாந்தன் அப்படியில்லாது இருந்தான் இது வாணிக்கு ஒர் விபத்தில் சிக்கி கொண்டவர் உயிருடன் மீண்டு வந்தால் ஏற்படும் நின்மதியாய் போல் இருந்தது வாழ்கையென்னும் விபத்து இதயத்தை அடைவு வைத்து வெறும் உணர்ச்சி சிறைச்சாலையில் சிக்கின்கொண்டு இது தான் வாழ்கையென்று வாழ்வதில்லை இரண்டு இதயத்தின் உணர்வின் ஒரு
இதயம் வாழ்வது அது வாணிக்கு கிடைத்தாக எண்ணி சந்தோஷபட்டுக்கொண்டாள்.. மெல்ல நகர்ந்த பொழுதோடு அரட்டையும் கிண்டலுமாக பொழுது போனது அன்று அப்படி தான் எல்லோரும் ஒன்றாய் வாணியின் அறையில் கூடினர் பெரியண்ணா தொடங்கினர் வாணியை பற்றி சொல்ல சாந்தன் ஆர்வமாக கேட்க வந்தான் ரகும் வாணியும் தான் ஒன்றாய் திரிவார்கள்  ரகு சரியான குழப்படி என்பதால் நிறையவோ அடிவாங்குவான் அடி வாங்கியதும் ரகு உடனோ தேடுவது வாணியை தான் நாங்கள் எல்லாம்
உடனோ தெரியாத மாதிரி நிற்போம்  அவன் அழக்கூடாது !இந்தம்மாவிற்கு
உடனோ ஆறுதல் சொல்ல வந்திடுவா அவ வந்து கண்ணீர் துடைத்து விட்டா போதும் இவனுக்கு எப்படி தான் அந்த வலிகள் போகுமோ தெரியாது  உடனோ எல்லாம் மறந்து வாணியின் கையைபிடித்து கொண்டு இருவரும் எங்களை எதிரியை பார்பது போல் பார்த்து விட்டு போவார்கள் அம்மாவிற்கோ ஆச்சரியமாய் இருக்கும்  தான் பெற்றபிள்ளை தான் என்ன சொன்னாலும் காதில் வாங்காது அவள் சொன்னவுடன் கேட்பதை பார்த்து !! உடனோ தாய் சொன்னால் ரகுவின் சேட்டை தோய்க்க எடுத்தால் பட்டன் போடும் ஒரு பக்கம் எப்பவும் சுருண்டுதான் இருக்கும் இந்தம்மா  விரலை விட்டு சுருட்டுவது  இவர்கள் ஒன்று சோர்ந்தால் இங்கு இன்னும் ஒருவருக்கு கோவம் வரும் பாருங்க என்றதும் சிந்து புன்னைத்த படி   அது வாணி என்னோடு சேராது ரகு அண்ணாவோடு சேர்வதால் என்றாள்  சரி சரி இப்படியே இன்றோடு பிரித்தா போக போகின்றீர்கள் எல்லோரும்  ஒன்றாய் தானோ இருக்க போகின்றீர்கள் லண்டனிலும்!!! போய் பேசுங்க !! படுங்க விடிய எல்லோரும் கோவிலுக்கு போக வேண்டும் வாணியின் தாய்யின்  வேண்டுதலை நிறைவேற்ற வேணும் சாந்தன் நிற்பபோடு என்று எல்லேரையும் அனுப்பி விட்டு தானும் படுக்கைக்கு போனார் சிந்துவின் அப்பா!!!விடிந்தது எல்லோரும் குளித்து வெளிக்கிட்டு கோவிலுக்கு சென்று அங்கோ எல்லாம் முடித்து கடைத்தெருவிற்கு சொன்றனர் உடனோ ரகு சொன்னான் இன்று செலவு முழுவதும் வாணி தான் யாருக்கு என்ன தேவையோ கேட்கலாம் என்றான்  எல்லோரும் வாணியின் பக்கம் திருபமுதல் சாந்தன் தன் பேஸ்சை வாணியிடம் கொடுத்தான் சரியென்றாள் முதல் முதல் வாணி சாந்தனுக்கு என்ன வேண்டி கொடுக்க கோகின்றாள் என்று பெரியண்ணா கேட்டார்  அவரின் பணதிலோ அவருக்கா என வாணியின் மனம்சங்கடம் கொள்ள இப்ப பணம் யாருடையது என்று யோசிக்க வேண்டாம் வாணி உங்களிடம் தந்தபணத்தில் நீங்கள் யார் யாருக்கு  என்ன என்ன வேண்டி கொடுக்க ஆசைபடுகினடறீர்களோ அதை செய்யலாம் என்றான் ரகு வாணிதலையை அசைந்துவிட்டு அணைவரையும் ஐஸ்கிறீம் கடைக்கு கூட்டி சென்று அவர்களுக்கு பிடித்ததை கேட்டு வேண்டி கொடுத்து விட்டு தானும் சிந்தும் கடைக்கு போவதாய் சொல்லி விட்டு சிந்துவை கூட்டி கொண்டு சொன்றாள்................................என்ன வேண்டி வரபோகின்றாள்  என்று தெரியாது கதைத்துக்கொண்டு இருவரும் வந்தனர் ஆனால் கையில் பெரிதாய் ஒன்றுமில்லை..............

No comments: