Wednesday, February 20, 2013

சிந்தனைகள்

மனசின் சாட்சியை அகற்றி மனசோடு விளையாடுபவன்
தன்னை மட்டுமே உயர்வாய் எண்ணுகின்றான்!!


உன்னை காயபடுத்தியவரை நீ காயபடுத்த யோசிக்கும் நேரத்தை
உன் பிரச்சனைகளை தீர்பதற்காக பயன் படுத்தி பார் !!!



உன்னை புரியவதர்களிடம் உன்னை புரியவைப்பதற்கு போராடுவதைவிட
நீ மௌனமாய் இருப்பதே மேல்!!


மிகப் பெரிய வலிகளை கண்டிராதவர்களால் மட்டும் தான்,
பிறரின் வலியில் இன்பம் காண முடிகிறது

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::...
மரணம் என்பது உயிர் பிரிவதால் மட்டும் அல்ல உயிருக்கு மேலான நம்பிக்கை உடையும் போதும் நிகழும் 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::..
 உன்னை விட உன் திறமைகளை நம்பு நீ ஒரு நாள் ஏமாந்தாலும்
அது உன்னை ஏமாற்றாது காபாற்றும்
............................

உன்னை தேடுவதாய்  உன் புகழளை தேடி உன்னை தொலைப்பதை விடஃ
உன்னை தேடி புகழை த் தொலைத்து பார் சந்தோசம் அப்படியோ இருக்கும்
...........................................

ஒரு தலைவனிடம்  தன்னை திறமைசாலியாய் காட்டும் தொண்டனை விட
மக்களிடம் அக்ககைறை கொண்ட தொண்டனே  நல்ல தலைவனை உருவாக்க  முடியும்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒரு அறிவாளி தன்னை அறிவாளியாய் காட்ட பல முட்டாள்களை உருவாக்குகின்றான் . ஓரு முட்டாள் தன்னை அறிவாளியாய் காட்ட
பல அறிவாளிகளை முட்டாளாக்குகின்றான்.


“முடியாது என்று நாம் கைவிடும் ஒரு காரியத்தை, யாரோ ஒருவன் நிச்சயம் செய்யத்தான் போகின்றான், அந்த யாரோ ஒருவனாக ஏன் நாம் இருக்கக்கூடாது?”
நீ ஒரு விஷயத்தை சரியாகசெய்து விட்டால் கோப பட தேவை இல்லை "
"தவறாக செய்து விட்டால் கோபபடுவதில் அர்த்தமில்லை "
நீ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே, உன் கண்ணீருக்கு தகுதி ஆனவர்கள் உன்னை அழ விட மாட்டார்கள்.............!!!