Saturday, July 20, 2013

ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்

பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள். 

* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும். 

* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும். 

* இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.  

ஆனால் அவ்வாறு மேக்-கப் நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது. 

மேற்கூறிய விஷயங்களை பெண்கள் தவிர்த்தால் நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

Thursday, July 18, 2013

கோபத்தால் வரும் பிரச்சனைகள்

1.நமது சொல்லை பிறர் ஏற்காதபோது அல்லது சொல்லியும் கேளாதபோது. 

2.பிறர் நம்மிடம் குறை காணும்போது 

3.பிறர் நம்மை அவமானத்திற்குள்ளாக்கும் போது 

4.நமது விருப்பப்படி காரியங்கள் நடக்காத போது. 

5.களைத்துப் போய் வீடு திரும்புகையில் உணவு சரியில்லாதபோது 

6.குழந்தைகள் தொந்தரவு கொடுக்கும்போது 

7.நமது மனதில் பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் இருக்கும்போது. 

8.பிறர் நம்மீது காரணத்தோடோ அல்லது அனாவசியமாகவோ கோபிக்கும் போது 

9.தூக்கத்தைக் கெடுக்கும் போது 

10. நமது அவசர வேலையில் பிறர் இடைஞ்சல் செய்யும்போது. 

11.பிறர் பொய் பேசும்போது 

12.நமது பெருந்தன்மையை, பிறர் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போது. 

13.நோய்வாய்ப்படிருக்கையில், சரியான உபசரிப்பு கிடைக்காதபோது கோபத்தால் புத்தி பேதலிக்கிறது. 

அறிவின் பிரகாசம் மங்கிவிடுகிறது. குளுமை குறைந்து அமைதி குன்றி விடுகிறது. இரத்த ஓட்டம் பாதிக்கிறது. கோபமிருந்தால் ஒருபோதும் இறையுணர்வை அனுபவிக்க முடியாது. கட்டுப்பாடு தவறி விடுவதால் எந்த ஒருவேலையையும் திறமையாகச் செய்ய முடியாது. 

உள்ளுக்குள் சூட்சுமமாக அடங்கியிருக்கும் பொறாமை மற்றும் பலவீனத்தின் அறிகுறியே கோபமாகும். இதனால் உறவு கெடும். குடும்பத்திலும் காரியாலயத்திலும் சுமுக நிலை பாதிக்கப்படும். 

அதிருப்தி நிலவும், பிறருக்கு அறிவுரை கூற முற்படுபவர், ஆனால் பிறர் சொல்லைக் கேளார். இதனால் தானும் துன்புறுவதோடு, பிறரும் இவரால் துன்புறுவர். இத்தகையோருக்கு வாழ்வில் அமைதி எப்படி கிட்டும். மொத்தத்தில் வாழ்வே காய்ந்து போய் விடும்.

பெண்களின் அன்பை பெற வழிகள்

பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும அறிந்து கொள்ள முடியாது. ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. 

• பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும் போது தோழனாகவும், மடி சாயும் போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு. 

• பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில் கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். 

• பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி. 

• எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்ப ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இடமுண்டு. 

• எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் ஆண்களை தான் பெண்களும் அதிகம் பிடிக்கும்.. எப்பொழுதும் ஜென்டில் மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால்தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும். 

• பெண்களைக் கவருவதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும். 

• பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். 

- இதுபோன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும்..
நன்றி மாலைமலர்

உலகிலேயே மிகவும் அழகான உறவு

உலகிலே மிக அழகான உறவாக வர்ணிக்கப்படுவது அம்மா- மகளுக்கு இடையே நிலவும் அன்பான உறவுதான். மகள்கள், அம்மாக்களை ரோல் மாடலாக ஏற்றுக்கொள்கிறார்கள். அம்மாக்கள் போட்டுக்கொடுக்கும் வாழ்க்கை மேப்பை வழிகாட்டியாகக் கொண்டுதான் மகள்கள் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

அந்த உறவை இன்னும் கொஞ்சம் மேம்படுத்த சில வழிகள் இருக்கின்றன. என் அம்மாவைப்போல் இந்த உலகத்தில் சிறந்த தோழி வேறு யாரும் இல்லை. எந்த கவலையையும் தீர்க்க என் அம்மாவின் மடி எனக்கு இருக்கிறது. எந்த மன பாரத்தையும் இறக்க என் அம்மாவின் தோள்கள் எனக்கு இருக்கின்றன என்று மகள் நினைக்கும் அளவுக்கான பந்தத்தை அவளது குழந்தைப் பருவத்திலே தொடங்கிவிடுங்கள். 

5 வயதில் அம்மாவின் முந்தானையை பிடித்துக்கொண்டு அவர் சொல்வதை எல்லாம் கேட்கும் மகள் 15 வயதில் எதிரிபோல் சீறுவாள். பின்பு 25 வயதாகும்போது மீண்டும் அம்மாவின் மடிக்கே திரும்பிவருவாள். அதனால் சின்னச்சின்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் வார்த்தைகளில் மகளை வறுத்துவிடவேண்டாம். 

அதனால் குறைந்த நேரம் பேசுங்கள். ஆனால் அது அன்பு கலந்த, நிபந்தனைகளற்ற பேச்சாக இருக்கட்டும். பேசிக் கொண்டே இருக்கவேண்டியதில்லை. அருகில் அமருங்கள். ஒன்றாக டி.வி.பாருங்கள். சினிமாவுக்கு செல்லுங்கள். 

விளையாடுங்கள். நடிகை ஒருவரை சினிமாவில் பார்த்துவிட்டு, அதுபோல் தன் தாய் எப்போதும் அன்பை பொழிவாள் என்று மகள் எதிர்பார்க்கக்கூடாது. அது போல் மகளை என்றும் கைக்குழந்தைபோல் நினைப்பதும், தான் கீ கொடுத்தால் ஓடும் பொம்மை என்றும் அம்மா நினைத்துவிடக் கூடாது. 

அம்மா தாயும் - மகளும் மனம் விட்டுப்பேச வேண்டும். இருவரும் இரு தலைமுறையை சேர்ந்த சுதந்திர மனிதர்கள் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்திருக்கவேண்டும். அப்படி நினைத்தால் தான் பிணக்கு குறைந்து இணக்கம் ஏற்படும்.
நன்றி மாலைமலர்

Sunday, July 14, 2013

தாம்பத்தியம் இனிக்க வழிமுறைகள்

தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்பதற்கான சூத்திரங்கள் மிக எளிமையானவை. தம்பதியர் இருவரும் தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை அடிக்கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, அப்போதைய சூழ்நிலையை இன்பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள். 

உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற்றை வாழ்க்கைத் துணையிடம் கூறி, அதற்கு அவரிடம் இருந்து கிடைக்க வேண்டியது அன்பு, அரவணைப்பும் தான் என்பதை நினைவுபடுத்துங்கள். நீங்களும் இதை திருப்பிக் கொடுக்க கடமைப்பட்டுள்ளதை உறுதியளியுங்கள். 

துணையின் குறிக்கோள் எதுவாக இருந்தாலும், அதை குறைகூறாதீர்கள். உங்களின் நெருங்கிய உறவுகள், நட்புகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பதைப் போல, வாழ்க்கைத்துணை சார்த்தவர்களையும் மரியாதை செய்யுங்கள். இது பரஸ்பர அன்புக்கு வழிவகுக்கும். 

அவர்கள் முன் வாழ்க்கைத்துணையை மட்டம் தட்டிப் பேச வேண்டாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக மிக அதிகமாக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நோய் மற்றும் வேறு ஏதாவது கவலையில் வாழ்க்கைத் துணை இருந்தாலும்....ஆறுதல் வார்த்தை கூறத் தவறாதீர்கள்.

பெண்களே! சந்தோஷமாக இருக்க காதலிக்காதீங்க

காதல் செய்துவிட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. காதலில் விழுந்துவிட்டால், சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. எதைச் செய்வதாக இருந்தாலும், காதலனிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். எனவே திருமணம் செய்வதற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கொண்டு, ஜாலியான வாழ்க்கையை வாழலாம். 

அதிலும் பெண்கள் வெட்கப்பட்டு, அனைத்தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம் எப்போதோ மாறிவிட்டது. தற்போது பெண்களும் அனைத்தும் அவர்களது விருப்பத்துடன் இருக்க வேண்டுமென்று நினைக்கின்றனர். குறிப்பாக தற்போதுள்ள பெண்களுக்கு சுதந்திரம் அவசியமாகிவிட்டது. பெண்கள் காதலில் விழாமல் இருந்தால், எந்த மாதிரியான சந்தோஷத்தை அடையலாம் என்று பார்க்கலாம்.... 

• காதல் செய்யாமல் இருந்தால், எந்த ஒரு செயலை செய்ய நினைத்தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம் இல்லை. நினைத்ததை எந்நேரத்திலும் பயமின்றி, தடையின்றி செய்யலாம். நாம் செய்யும் செயல் காதலருக்கு பிடிக்கவில்லை என்றால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட வழிவகுக்கும். 

• பெண்களுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்களுக்கு அதுவே பொழுதுபோக்காக இருக்கும். எனவே தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோஷமாக ஷாப்பிங்கிலேயே இருக்கலாம். ஆனால் ஆண்களுக்கு ஷாப்பிங் என்றால் பிடிக்காது. ஏனொனில் பர்ஸ் காலியாகி விடும் என்று நினைப்பார்கள். 

• காதல் செய்யாமல் இருந்தால், அலுவலகத்தில் நல்ல ஆர்வத்துடன் வேலை செய்யலாம். அதிலும் அலுவலகத்தில் கொடுத்துள்ள இலக்கை அடைய எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வேலை செய்ய முடியும். 

• காதல் வந்துவிட்டால் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவே முடியாது. ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர்களுடன் எங்கு வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சந்தோஷமாக செலவழிக்கலாம். 

• சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்களுடன் பேசவே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும், ஆண் நண்பர்களுடன் பேசலாம்.
நன்றி...மாலைமலர்

டீன் ஏஜ்' குழந்தைகளிடம் பெற்றோர் பேச வேண்டிய விஷயங்கள் என்ன?

வளர்ந்து வரும் குழந்தைகள் `டீன் ஏஜ்' பருவத்தை அடையும்போது, பெற்றோர் என்ற முறையில் அவர்களைப் பற்றி கவலை ஏற்படுவது இயற்கை தான். அவர்களது மனம், உடல், எண்ணம் ஆகியவற்றைப் பாதிக்கும் விஷயங்கள் ஏராளம் உள்ளன.

மேலும் அவர்களால் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளும் ஏராளம். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் அதிகம். அவற்றை எதிர்கொள்ளவும், முன்கூட்டியே காத்துக்கொள்ளவும், எதிலிருந்து தொடங்குவதுப எப்படித் தொடங்குவது? எப்படிக் கையாள்வது? என்பதை பற்றி பார்ப்போம்.

இன்றைய காலத்தில் குழந்தைகளை வெளியில் அனுப்பி விட்டு மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறோம். நாள்தோறும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப்பார்த்து நமக்கு பயமாக இருக்கிறது. தற்போது உள்ள குழந்தைகளுக்கு நாம் சிறு வயதில் கற்றுக்கொண்ட விஷயங்களை விட அதிகமாக கற்றுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

யார் மூலமாகவோ சில விஷயங்கள் தவறாக போதிக்கப்படுவதை விட, அதன் விளைவாக தவறான நடவடிக்கைகளுக்கு அவர்கள் சென்று தவறான முடிவுகள் எடுப்பதை விட, பெற்றோர்களே அவர்களுக்கு அவற்றை நாசூக்காக சொல்லிக்கொடுத்தால் நல்லது. டீனேஜ் குழந்தைகளிடம் கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்களை கீழே பட்டியலிட்டுள்ளோம். இவ்விஷயங்களை பற்றி குழந்தைகளிடம் மென்மையாகப் பேசலாமே!

பாலுறவு மற்றும் பாலியல்..........

வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு ஊடகங்கள் வாயிலாகவோ, நண்பர்கள் மூலமாகவோ அல்லது தற்செயலாக ஏற்படும் அனுபவங்கள் வாயிலாகவோ, பாலுறவு மற்றும் பாலியல் தொடர்பான விஷயங்கள் தெரியவர வாய்ப்புள்ளது.

எனவே கருத்தடை, தேவையில்லாத கர்ப்பம், கருக்கலைப்பு முதலிய விஷயங்கள் குறித்து டீனேஜ் குழந்தைகளிடம் சொல்லி வைப்பதுடன், அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும், ஒருவரை முறையுடன் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

போதை மருந்துகள், மதுபானங்கள்.........

ஒரு மனிதனாக வளர்ந்து வருகிறோம் என்பதை அறிந்து கொள்ளும் வயதில் உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பார்கள். அப்போது உடன் பயிலும் நண்பர்களுடன் ஜாலியாகப் பார்ட்டியில் கலந்து கொள்வார்கள். பார்ட்டிகளில் கலந்து கொள்வதில் அவர்களுக்கு நிறைய விருப்பம் இருக்கும்.

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு போதை மருந்துகள், மது பானங்கள் மற்றும் இதர போதையேற்றும் பொருட்களை யாராவது அறிமுகப்படுத்தலாம். அவர்களது நண்பர்கள் பல் வேறு சமூகப் பின்னணியை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயங்களாக இருக்கும்.

அத்தகைய நண்பர்களின் வற்புறுத்தலால் இவற்றை குழந்தைகள் உட்கொள்ள வாய்ப்புண்டு. எனவே குழந்தைகளுக்கு இவற்றைப் பற்றிச் சொல்லி சரியாக வளர்க்க வில்லையென்றால், அவர்கள் இதனை ஜாலிக்காகச் செய்கிறேன் என்று ஆரம்பித்து, பின்னர் அடிமையாகி விடுவார்கள்.

குழந்தைகள் இதுபோன்ற பார்ட்டிகளுக்குச் செல்கிறார்கள் என்று தெரிய வந்தால் உடனே அவர்களை அழைத்து இது குறித்து அவர்களுக்கு சொல்லி வைக்க வேண்டும். போதுமான அறிவுரைகளை மட்டும் கூறுங்கள். இது மிகவும் அவசியமானது.

பணத்தை கையாளுதல்...........

குழந்தைகள் உழைத்துப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றால் அதன் அருமை, மதிப்பு எல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அவற்றை எப்படி சேமிக்க வேண்டும் என்றும், அது எப்படி பிற்காலத்தில் உதவும் என்றும் தெரிந்திருக்கும். ஆனால், பணம் சம்பாதிக்காத குழந்தைகளுக்கு, அதன் அருமை தெரியாது.

செலவு செய்யத் தயங்க மாட்டார்கள். பணம் சம்பாதிக்க பெற்றோர்கள் படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. இந்த மாதிரியான குழந்தைகளிடம் பணத்தின் மதிப்பு பற்றியும், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும். அது முதன்மையான வேலையாக இருக்கட்டும்.

குடும்பத்தின் மேன்மை.........

டீனேஜ் பருவத்தினருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். பாடங்கள், பாடம் தொடர்பான குறிப்பெடுத்தல், புராஜெக்ட், நண்பர்களூடன் அரட்டையடித்தல், பார்ட்டிகளுக்கு செல்லுதல், கிரிக்கெட் விளையாடுதல் போன்ற பல வேலைகளுக்கிடையில், அவர்கள் வீட்டில் இருப்பது குறைவு.

அப்படி வீட்டில் இருந்தாலும், குடும்பத்திலுள்ள மற்றவர்களுடன் பேசி மகிழ்வதும் குறைவாகவே இருக்கும். அவர்களது இளமை வேகத்தில் வீட்டில் அமைதியாக இருக்க அவர்களுக்குப் பிடிக்காது. நேரம் கிடைக்கும் போது, குடும்பத்தின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்கு இதமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

குடும்பத்தினரிடையே எப்படி அன்பாக, பாசப்பிணைப்புடன் இருக்க வேண்டும் என்பது பற்றியும், வீட்டில் நடைபெறும் சிறுசிறு சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்குபெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

டேட்டிங்.........

துணைவரை அடிக்கடி மாற்றுவதில் எந்தத் தவறும் இல்லை என்றும், உறவுகளை முறித்துக் கொள்வது சகஜம்தான் என்றும், நம்முடன் உறவாக இருப்பவர்களை ஏமாற்றுவது பெரிய தவறு ஒன்றும் இல்லை என்றும் டீனேஜ் பருவத்தினர் நினைத்துக் கொள்கிறார்கள்.

இந்த மாதிரியான தவறான எண்ணங்களுடன் குழந்தைகள் வளர்வதற்கு இடம் கொடுக்காமல், நட்பு மற்றும் உறவுகளின் மேன்மை பற்றியும், முக்கியத்துவம் பற்றியும், அவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஒரு நண்பனாக அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இணையதளத்தில் உலவுதல்............

தற்போதுள்ள இளைஞர்கள் இணைய தளம் வழியாக ஆன்லைன் சாட்டிங், ஃபேஸ்புக் வழியாக கருத்துப்பரிமாற்றம், நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை விரும்புகிறார்கள். இத்தகைய ஆன்லைன் உறவுகள், அவர்களது எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை மறந்து போகலாம்.

அவர்கள் இணையதளம் வழியாக என்னென்ன நடவடிக் கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை பெற்றோர்களால் கண்காணிக்க முடியாமல் போனாலும் கூட, இவ்வித ஆன்லைன் நடவடிக்கைகள் அவர்களது எதிர்காலத்தினை எவ்வாறு பாழ்படுத்தக்கூடும் என்பது குறித்த விழிப்புணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மேலும் இதுகுறித்து நாளிதழ்களில் வரும் செய்திகளை, அவர்களது கவனத்திற்குக் கொண்டு வந்து, அது குறித்த அச்சத்தினை ஏற்படுத்த வேண்டும்.

வெற்றியின் ருசி...........

குழந்தைகளிடம் வெற்றி என்றால் என்னவென்றும், அது குறித்து அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேட்க வேண்டும். கல்வி, விளையாட்டு அல்லது அவர்கள் விரும்பும் வேறு ஏதாவது துறை ஆகியவற்றில் அவர்கள் சாதிக்க வேண்டியவை, வாழ்க்கையில் ஒரு லட்சியம் அல்லது குறிக்கோள் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு, அதனை நோக்கிப் பயணித்தல் போன்ற விஷயங்கள் குறித்து, அவ்வப்போது பெற்றோர்கள் பேச வேண்டும்.

வேண்டுமெனில் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் துறையில் சாதிக்க வேண்டியவை குறித்தும் பேசலாம். `வரலாறு படித்தல் நல்லது தான். ஆனால் வரலாறு படைத்தல் அதனினும் நல்லது' என்றும் கூற வேண்டும். அவர்களது மனதில் "பத்தோடு பதினொன்றாக'' என்று இல்லாமல், வெற்றி வீரனாக தனியாகத் தெரிவதன் பெருமையை பெற்றோர்கள் எடுத்துக் கூற வேண்டும்.

அறிவுரை வார்த்தைகள் அவர்கள் மனதில் பதிந்து, அவர்களது வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு நினைவுக்கு வர வேண்டும். வாழ்வின் அனைத்து கஷ்ட, நஷ்டங்கள், நன்மை, தீமைகளை பிள்ளைகள் நன்கு உணறுமாறு பெற்றோர் எடுத்து கூறவேண்டும்.
tamil matrimony_INNER_468x60.gif
நன்றி ..மாலைமலர்