Friday, January 3, 2014

எனக்குப்பிடித்தபாடல் வரிகள்....













8.பெண் : கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு
பூந்தோரணம் அது ஏன் வாடணும்
போராட்டமா நம் சீர் சீதனம்
தண்ணியில மானப் போல நானிருக்கேன்
ஓ ஓ தரையில மீனைப் போல நீயிருக்க

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு

***

பெண் : வெத்தலையில் பாக்கு வெச்சு
பத்துப் பேரைப் பார்க்க வெச்சு
கட்டிக்கிட ஆசைப்பட்டேன் நானே
மத்தவங்க துணையுமில்ல
அத்தை மவன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குது ஒரு மானே
தீராத கோபம் அது யார் போட்ட தூபம்
இதில் நான் செய்த பாவம் என்ன
என்னவோ பாடுறேன்
சொந்தம் ஒண்ணு தேடுறேன்

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
காதலிச்ச காலமெல்லாம்
கனவு போல ஆச்சு
அதில் கரையுது எந்தன் மூச்சு

***

ஆண் : நம்பி வந்த காதல் ஒண்ணு
அன்பு உள்ள பாசம் ஒண்ணு
ரெண்டுப் பக்கம் தவிக்கிறண்டி மானே
அண்னனுக்கு பயந்த தம்பி
அண்ணியாரு மனசை நம்பி
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே
தாய் தந்தை கோபம்
அதில் வாழ்கின்ற பாசம்
ஒரு தவறாகிப் போகாதடி
மெல்ல மெல்ல மாறும்
நல்ல வழிக் கூறும்

கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு
தாலி கட்டி முடிந்ததுமே
தாரம் என்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு
பூந்தோரணம் அது வாடாதம்மா
போராடியே அதைக் காப்பேனம்மா
தண்ணியிலே மானைப் போல நானிருக்கேன்
ஓய் தரையிலே மீனைப் போல நீயிருக்க

பெண் : கூண்டவிட்டு ஒரு பறவை
கோடு தாண்டிப் போச்சு
வழிக் கோணல் மாணலாச்சு

ஆண் : தாலி கட்டி முடிந்ததுமே
தாரம் என்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு










7.ஆண் : கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

***

ஆண் : க ரி ஸ ப ம க...பா நி
ச ரி க ரி க ஸ...நீ பா

ஆண் : ஆ..ஆ..ஆ..ஆ..

ஆண் : நீ பார்த்ததால் தானடி
சூடானது மார்கழி
நீ சொன்னதால் தானடி
பூ பூத்தது பூங்கொடி

பெண் : தவம் புரியாமலே
ஒரு வரம் கேட்கிறாய்
இவள் மடிமீதிலே
ஒரு இடம் கேட்கிறாய்
ஒரு வாய் பெறுவாய் மெதுவாய்
தலைவனை நினைந்ததும்
தலையணை நனைந்ததேன்
அதற்கொரு விடை தருவாய்

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே
அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

***

ஆண் : புலி வேட்டைக்கு வந்தவன்
குயில் வேட்டை தான் ஆடினேன்
புயல் போலவே வந்தவன்
பூந்தென்றலாய் மாறினேன்

பெண் : இந்த வனமெங்கிலும்
ஒரு சுரம் தேடினேன்
இங்கு உனைப் பார்த்ததும்
அதை தினம் பாடினேன்
மலரில் மலராய் மலர்ந்தேன்
பறவைகள் இவளது
உறவுகள் என தினம்
கனவுகள் பல வளர்த்தேன்

கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே

ஆண் : அடி ஏனடி சோதனை
தினம் வாலிப வேதனை
தனிமையில் என் கதி என்னடி
சங்கதி சொல்லடி வாணி கீரவாணி
இரவிலே கனவிலே பாட வா நீ
இதயமே உருகுதே










6..என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ

***

தெம்மாங்கு பாடிடும் சின்னவிழி மீன்களோ
பொன்னூஞ்சல் ஆடிடும் கன்னி தரும் கூந்தலோ
தொட்டாடும் மேடை பார்த்து வாடிப் போகும் வான்திரை
முத்தாரம் மீட்டும் மார்பில் ஏக்கம் தேக்கும் தாமரை
வண்ணப் பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்கத் தாங்காமல் நாணுவாள்
புதுப் பூக்கோலம் தான் காலில் போடுவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா

***

ஆ..ஆ...ஆ...ஆ
கண்ணோரம் ஆயிரம் காதல்கணை வீசுவாள்
முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாயம் மேகமாகி ஆசைத் தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடிப் பாடி ஓடுவாள்
அதிகாலை ஊற்று அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்

என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ
அவள் வான்மேகம் காணாத பால்நிலா
இந்த பூலோகம் பாராத தேன்நிலா
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படிச் சொல்வேனோ







5.பெண்: அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி
அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள்இனி
இமை இரண்டும் தனித்தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி 

(இசை...)

பெண்: எந்தக்காற்றின் அலாவளில் 
மலர் இதழ்கள் விரிந்திடுமோ
எந்த தேவ வினாடியில் 
மலரிதழ் திறந்திடுமோ
ஒரு சிறு வலி இருந்ததுவே 
இதயத்திலே இதயத்திலே
உனது இருவிழி தடவியதால்
அவிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே
உதிரட்டுமே உடலின் திரை
அதுதான் இனி நிலாவின் கரை கரை (அனல் மேலே பனித்துளி...)

(இசை...)

பெண்: சந்தித்தோமே கனாக்களில்
சில முறையா பல முறையா
அந்தி வானில் உலாவினோம்
அது உனக்கு நினைவில்லையா
இரு கரைகளை உடைத்திடவே
பெருகிடுவாய் கடல் அலையே
இரு இரு உயிர் தத்தளிக்கையில்
வழிசொல்லுமா கலங்கரையே
உனதலைகள் எனை அடித்து
கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே பனித்துளி...)












4.அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் 
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ 
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே 
சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே 
புகழ்மைந்தன் தோன்றினானே புகழ்மைந்தன் தோன்றினானே

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் 
கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் 
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே 
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே 
புவிராஜன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் 
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே 
அதிரூபன் தோன்றினானே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் 
வந்தவன் மின்னினானே வந்தவன் மின்னினானே










3. ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி
ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கடல் கடக்குது இதயம் உன் கண்ணில் நீந்தித்தானோ ஹோய்
துடிதுடிக்கிற நெஞ்சில் இனி தூவானம் மழைதானோ
காதல் விழாக் காலம் கைகளில் வாவா ஈர நிலாப் பெண்ணே
தெம்மாங்கை ஏந்த வரும் பூங்காற்றே
என் கூந்தல் பொன்னூஞ்சல் ஆடி வா
வீணை புது வீணை சுதி சேர்த்தவன் நானே
நம் காதலின் கீதங்களில் வானம் வளைப்பேனே

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்கிடும் கிளி தங்கமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ ஹோய்
பூவிழியின் ஓரம் வானவில் கோலம் பொன்மகளின் நாணம்
நிலாவின் பிள்ளை இங்கு நீதானோ
பூஞ்சோலை பூக்களுக்குத் தாய்தானோ
ஆசை அகத்திணையா
வார்த்தை கலித்தொகையா
அன்பே நீ வாவா புதுக்காதல் குறுந்தொகையா

ஆற்றில் குளித்த தென்றலே
சொல்லுமே கிளி சொல்லுமே
துள்ளாதடி துவளாதடி வம்புக்காரி
கொஞ்சாதடி குலுங்காதடி குறும்புக்காரி

நெஞ்சிலொரு தும்பி பறக்கும் ஹைய்யோ ஹையய்யோ
செல்லக்கிளி சிந்து படிக்கும் ஹைய்யோ ஹையய்யோ

ஆலோலம் கிளி தோப்பிலே
தங்குமே கிளி தங்குமே
இல்லாததை சொல்லாதடி ஓல வாயி
விளையாடிடக் கூடாதடி கூத்துக்காரி









2.பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே

பெண்குழு : தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்துதா தும்தும் 
தும்தும்தும்துதா தும்தும் தும்துதா தும்தும் தும்தும்

***

பெண் : எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு
இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு

பெண்குழு : ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஓ...ஒ...ஓ...ஒ...

ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு
மீனாட்சிக் குங்குமத்தை... நெத்தியிலே சூடச் சொல்லு




பெண் : சொன்னத நானும் கேட்குறேன் சொர்ணமே அங்கபோய் கூறிடு

ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு

பெண் : மாமன் நெனைப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துது
என்னையே புது பூவா வெடிச்ச பின்னையே

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

***

ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சி வில்லுவண்டி செய்ஞ்சி தாறேன்
வண்டியிலே வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வார்றேன்

பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சி பல்லக்கொன்னு செய்ஞ்சித்தார்றேன்
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சி கொஞ்ச வார்றேன்

ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி

பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி

ஆண் : ஊரும் உறங்கட்டும் ஒசை அடங்கட்டும்
காத்தா பறந்து வருவவேன் புதுபாட்டா படிச்சி தருவேன் 

பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே

ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ...
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா
என்னம்மா கண்ணம்மா ஹோய்

ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல்
ஆசைநெஞ்சில் நான் இருப்பேனே

பெண் : நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே




 1.. புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி ஒன்ரு
தூங்குது தூங்குது பாரம்மா - அதை
சூரியன் சூரியன் வந்து செல்லமாய் செல்லமாய்த் கிள்ளி
எழுப்புது எழுப்புது ஏனம்மா?
இதயம் பரவை போலாகுமா பரந்தால் வானமே போதுமா?

(புல்வெளி)

 சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி
சிட்டாகச் செல்லும் சிரகைத் தந்தது யாரு?
பட்பட்பட் பட்பட்பட்பட் பட்டாம்பூச்சி
பலனூரு வன்னம் உன்மேல் தந்தது யாரு?
இலைகலில் ஒலிகின்ர கிலிக் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்
கிலைகலில் ஒலிகின்ர குயில் கூட்டம்
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திரந்திருக்கு பாருங்கல் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கல்

(புல்வெளி)

துல்துல்துல் துல்துல்துல்லென துல்லும் மயிலே
மின்னல்போல் ஓடும் வேகம் தந்தது யாரு?
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு?
மலையன்னை தருகின்ர தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெல்லை அருவி
அருவியை முழுவதும் பருகிவிட
ஆசையில் பரக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்
அம்மம்மா...
வானம் திரந்திருக்கு பாருங்கல் - எனை
வானில் ஏற்றிவிட வாருங்கல்

(புல்வெளி)

Sunday, September 15, 2013

படித்தில்பிடித்தது..........


1.கணவன்-மனைவி உறவை பாதுகாக்க வழிகள்


கணவன்-மனைவி பிரிந்திருப்பது தான் ஈடு செய்ய முடியாத பிரிவு. மனரீதியாக மகிழ்ச்சியாக இருந்தாலும், உடல் ரீதியான பிரிவு உங்கள் வாழ்க்கையில் ஒரு வெறுமையை ஏற்படுத்தி விடும். காலப்போக்கில் அதுவே மனரீதியான பாதிப்புகளையும் கொண்டுவரும். தம்பதிகள் இணைந்தே வாழ்க்கையை கொண்டாட சில யோசனைகள்: 

* மனோதத்துவ மருத்துவர்கள் கணவன், மனைவி பிரிவு வெகுகாலம் நீடித்திருக்கக் கூடாது என்கிறார்கள். அது இருவரிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மனைவியின் பிரிவால் பாதைமாறும் கணவருக்கு காலப்போக்கில் அது ஒரு குற்ற உணர்வாக மாறிவிடும். அது அவர்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அதன் பிறகு மன அழுத்தமும் சேர்ந்து கொள்ளும். இதனால் பிடிவாதம் தவிர்த்து மீண்டும் சுமூக நிலைக்கு வரப்பாருங்கள். 

* பிரிவு என்பது வாழ்க்கையில் ஒரு இயல்பான விஷயம் தான். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் அந்த பிரிவின் நோக்கமே மாறிவிடும். வேறு மாதிரியான பிரச்சினைகள் உருவாகி குடும்பத்தை சிதைத்து விடும். பணம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதில்லை. ஆனால் அன்புக்கு மட்டுமே இதெல்லாவற்றையும் மாற்றும் சக்தி உண்டு. 

* வெகு நாட்களாக பிரிந்திருக்கும் கணவன், மனைவி ஒன்றை மறந்து விடக் கூடாது. பெரும்பாலும் உடல் ரீதியான சில தேவைகள் பூர்த்தி செய்யப்படாத சூழலில் தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன. இதனை இருவரும் புரிந்து நடந்து கொண்டாலே பல பிரச்சினைகள் வாசல் தாண்டிப் போய்விடும்.. 

* கூடியிருப்பதே குடும்பம். இஷ்டத்துக்கு பிரிந்திருந்து விட்டு மறுபடி திடுமென ஒரு குடும்பத்தை கட்டமைப்பது என்பது சாத்தியப்படாத. ஒன்று. அதனால் எந்த சூழலிலும் பிரிவதற்கான எண்ணத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள். 




2,காதல் திருமணம் செய்யுங்க நிறைய நன்மையிருக்கு!


திருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமையவேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது. 

பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். 

காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் லவ் மேரேஜ் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன். காதல் திருமணத்தில் நமக்குப் பிடித்தவரையே திருமணம் செய்யலாம். இவரைத் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. 

ஆனால் அதில் பெற்றோர் சம்மதித்தால் மட்டுமே செய்ய முடியும். காதல் திருமணத்தால் ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம். மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம். 

இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது. காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும். 

இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் சொந்தங்களிடையே தான் செய்வோம். இவ்வளவு நன்மைகள் இருந்தால் காதல் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாகத் தான் அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

...............................................

3,வெற்றிக்குத் தேவை, புதிய கண்ணோட்டம்!

இந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது. 

‘வெற்றியடைவது எப்படி? வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், 'இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி' என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது. 

அதுவும் இந்த வேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவும் கூட வேறுபடுகிறது. 

பணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள்பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்லவா? காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா? தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ்நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது. 

இந்த கருத்துக்கள் தான் குடும்பம், அரசியல், ஆன்மிகம், கலைத்துறை, கல்வித்துறை என்று பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து, வெற்றி பெறுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும் தோல்வி பெறுகிறவர்களுக்கு துக்கத்தையும் தருகிறது. ஒரு தலைமுறையினர், இன்னொரு தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்களில், முக்கால்வாசி இந்த வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான் இருக்கிறது.

ஒரு தலைமுறையினர் மிகப்பெரிய வெற்றி என்று நினைத்தது, அடுத்த தலைமுறையினருக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அந்த காலகட்டத்தில் சொல்லப்படும் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்களுக்கு இடையே அல்லல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. 

வெற்றி, தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், சோர்வையும், சக்தியற்ற நிலைமையையும் உருவாக்கி விடும். ஒரு வகையினர் வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள், இன்னொரு வகையினர், அமைதியாக இருப்பதே பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள். 

ஆனால் இரு வகையினருமே, வெற்றி என்ற வார்த்தைக்குள் தான் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு அடையாளமா? அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா? என்று கேட்டால், அதை ஒரு அடையாளம் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும். 

இந்த அடையாளம் தான் சிறந்த மாணவன், சிறந்த வியபாரி , சிறந்த அரசியல்வாதி , சிறந்த மருத்து வர் என்று பல் வேறு முத்திரைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்த முத்திரை மாறிக் கொண்டு இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் தோல்வி அடைந்தவர்கள் கண் கலங்குவதும், அதைப்பார்த்து பெற்றோர்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுவதும், வெற்றி பெற்று விட்டால், அலப்பறை பண்ணுவதும் இரண்டுமே தவறான அணுகுமுறைகள். 

காரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனிக்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாணவி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல்வேறு மன உளைச்சல்களைத்தான் உருவாக்கும். 

ஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினைக்கவே நினைக்காது. அதே போல், ஒரு சிங்கம் மயிலைப் போல் ஆட முடியவில்லையே என்று நினைக்காது. அவைகள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமையாக இருக்கின்றன. 

ஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம். 

அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம். 

எந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக் கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர்கள். 

இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எது எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோம். 

இதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது. 'கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்'' ''ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்'' ஓ.கே. இந்த விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லை 'பாசிட்டிவ்' சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை. 

அனைவரும் நன்றாக படித்து சென்டம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட்? அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை. மாணவர்களைச் சுற்றி 'மெஷின் கன்'னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால் கூட, உயிருக்கு பயந்து கூட அனைவரும் 'முதல் ரேங்க்' எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது. 

ஆக, பொது விதிமுறை அனைவராலும் 'முதல் ரேங்க்' எடுக்க முடியாது என்பது தான்... இன்னொரு பொதுவிதிமுறை, படிப்பில் 25-வது ரேங்க் எடுப்பவன், விளையாட்டில் முதலிடம் வரலாம். வகுப்பில் கடைசி ரேங்க் எடுப்பவன் பாட்டு போட்டிகளில், நன்றாக பாடி லட்சங்களில் பரிசை அள்ளலாம். 

ஆக எவருமே சாதாரண நபர்களில்லை, ஒரே மாதிரி நபர்களுமில்லை... ஒரு மனிதனோட கட்டைவிரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்... இயற்கையே இவ்வளவு 'சிம்பிள்'ஆக சொல்லி விட்ட பிறகும் கூட நாம் தான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம். 

சிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும். 

அதனால் முதல் இடமே லட்சியம் என்ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும். அந்தநே ரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை தராது என்பது இதில் உணரவேண்டிய உண்மை.