Sunday, July 21, 2013

நீங்கள் நல்லவர் தான்


* சமயம் என்கிற கறவை மாடு பல தடவை உதைத்திருக்கலாம். ஆனால், அதை நாம் பொருட்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது நமக்கு நிறைய பால் தருகிறது. பால் கொடுக்கும் பசுவின் உதையைப் பால்காரன் பொருட்படுத்த மாட்டான்.* நாம் அனைவரும் ஒளி தரும் விளக்குகள். விளக்கு எரிந்து ஒளி காட்டுவது தான் நம் வாழ்க்கை என கொள்ளப்படுகிறது. * கடவுளிடம் ஒன்றையும் வேண்டாதீர்கள். வேண்டுதல் ஒரு பலவீனம். இதனால், நாம் பிச்சைக்காரர்களாகி வருகிறோம். நாம் அனைவரும் ராஜகுமாரர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.* பலவந்தமாகச் செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகள் எப்போதும் பயன் தருவதில்லை. நீங்கள் அனைவருமே நல்லவர் தான். இன்னும் நல்லவராக முயலுங்கள்.* அன்பு ஒருபோதும் பிறரைக் குறை கூறுவதில்லை. பேராசை தான் பிறரைக் குறை சொல்லி மகிழ்கிறது. அதில் நேர்மையோ நியாயமோ இருப்பதில்லை. எனவே ஆசையை ஒதுக்குங்கள்.- விவேகானந்தர்

எது வந்தாலும் போராடு

* உன்னால் ஒருவருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாக உன்னால் சேவை தான் செய்ய முடியும். உயிர்களுக்கு தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்தவன் ஆவான்.* நீ செல்லும் பாதை, கத்தி முனையில் நடப்பது போல மிகவும் கடினமானது தான் என்றாலும், மனம் தளராமல் குறிக்கோளை நோக்கி முன்னேறு.* தோல்வியைத் தழுவி உயிர்வாழ்வதை விடப் போர்க்களத்தில் மாய்வதே மேல்.* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.* ஒரு கருத்தை எடுத்துக் கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மயமாக்கு. அதையே கனவு காண். மூளை, தசை, நரம்பு என உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும்.* எது வந்தாலும் போராடிக் கொண்டிரு. கோழையாவதனால் நீ எந்த ஒரு பயனையும் பெற மாட்டாய்.விவேகானந்தர்

Saturday, July 20, 2013

மனைவி பாராட்ட வேண்டுமா?

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும். 

தினமும் வேலையில் நடக்கும் விஷங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மனைவி தான் விட்டு கொடுத்து போக வேண்டும் என்று நினைக்காமல் சில விஷயங்களை மனைவிக்காக விட்டு கொடுத்து பாருங்கள் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். 

• மனைவியைக் கவுரவமாக நடத்துங்கள். 

•  வெளியில் எங்கே போகிறீர்கள், எப்போது திரும்புகிவீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள் 

•  ஆடம்பர செலவுகளைக் குறையுங்கள் 

•  மனைவிக்கு அவசர செலவுகளுக்கு சிறிது பணம் கொடுங்கள் 

•  உங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு அவரிடம் விவாதியுங்கள் 

•  அவர் தனது பிரச்சனைகளை உங்கள் செவியில் போட்டால் மனதார காது கொடுத்து கேளுங்கள் 

•  வருங்காலத்துக்கு ஒரளவு பணம் சேமித்து வைக்க பாருங்கள் 

•  குழந்தைகளைப் பற்றிய சிந்தனை சதாநேரமும் உங்களுக்கு இருக்கட்டும் 

•  பயணங்களால் மனைவியைப் பிரியும்போதும் வீட்டுக்குள் வரும் போதும் முத்தமிடுங்கள் அல்லது புன்னகையாவது பூத்தல் அவசியம் 

•  இவைகளை மறவாமல் கடைப்பிடித்து வந்தால் மனைவி உங்களை ஆஹா...ஓஹோ என புகழ்வது உறுதி

கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய

அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும். 

ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும், ஒரு சில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லாவிட்டால், அந்த உறவு போலியானது. சொல்லப் போனால், உண்மையான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. அத்தகைய உண்மையான உறவில் சண்டைகள், அகங்காரம், விவாதம் போன்றவைகள் இருக்கத்தான் செய்யும். ஏனெனில் அவை இயற்கையானவை. 

அத்தகைய இயற்கையான சில செயல்கள் கூட, பழகும் துணையிடம் இல்லாவிட்டால், அந்த உறவை போலியானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் போலியான உறவில்தான் எந்த ஒரு பிரச்சனையும், அக்கறையும் இல்லாமல் இருக்கும். சரி, இப்போது நீங்கள் துணையாக நினைத்து பழகும் போலியான அன்பு கொண்டவர் என்பதை அறிய சில அறிகுறிகள் கொண்டு தெரிந்து கொள்ளலாம். 

• அளவுக்கு அதிகமாக அன்பை வெளிப்படுத்துவது என்பது தவறில்லை. ஆனால் அத்தகைய அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்துவது தான் தவறானது. உண்மையில் காதல் செய்யும் எவரும், அன்பை பொது இடங்களில் வெளிப்படுத்த மாட்டார்கள். அன்பு என்பது ஒருவரது மனதில் இருந்தால், போதுமானது. அத்தகைய அன்பை மற்றவர் பார்க்கும் வகையில் பொது இடங்களில் வெளிப்படுத்துவது போலியான உறவைக் குறிக்கும். 

• உண்மையான உறவில் ஆலோசனைகள் இருக்கும். அவ்வாறு ஆலோசனை செய்யும் போது இருவரும் ஒவ்வொரு புள்ளியிலிருந்து யோசித்து பேசுவோம். ஆனால் விவாதமானது எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேலைபற்றியோ இல்லாமல், வெறும் கூந்தல், ஆடை போன்றவற்றைப் பற்றியே இருந்தால், அது உறவை போலியானது என்று காட்டும். 

• துணையின் விருப்பமான படம், ரெசிபி, நிறம் மற்றும் மறக்க முடியாத நிகழ்வு போன்றவை தெரியுமா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் இருந்தால், அவர்/அவள் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லை யென்றும், மேலும் அது உண்மையான அன்பு இல்லை என்றும் தெரிவிக்கிறது. 

• சண்டைகள் மற்றும் வாதங்கள் இருந்தால் தான், உறவு நன்கு வலுவாக இருக்கும். ஆனால அத்தகையது எதுவும் இல்லாமல் எந்நேரமும் சாதாரணமாக இருந்தால், அது வாழ்வில் சுவாரஸ்யத்தை குறைந்து, உறவை போலியானது போல் காட்டும். 

• எந்த ஒரு நட்போ அல்லது காதலோ கிடைத்தாலும், முதலில் அவர்களது குடும்பத்தை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால் போலியான உறவு இருந்தால், அத்தகையவர்களை சந்திக்க விருப்பமில்லாமல், அடிக்கடி வேலை உள்ளது என்று ஓடி விடுவார்கள் 

• துணையாக இருப்பவர்கள் இரகசியத்தை மறைப்பது, அவர்களது கண்களில் நன்கு தெரியும். உண்மையான உறவில் இரகசியங்கள் என்ற ஒன்று இருந்தால், அதுவும் போலியானது தான். எப்போதும் நெருக்கத்துடன் இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. 

நெருக்கமானது, அவர்கள் மனம் வருந்தும் போது, சமாதானப்படுத்துவதற்கு நெருக்கமானது வேண்டும். ஆனால் அது சுத்தமாக இல்லாவிட்டால், பின் அது நிச்சயம் உண்மையான உறவாக இருக்க முடியாது.

பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்

இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும். 

பெண்களுக்கு ஆண்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வருவதற்கு காரணம் ஆண்களது ஒருசில குணங்கள் தான். அதே சமயம் வெறுப்பு வருவதும் குணங்களால் தான். அத்தகைய குணங்கள் என்னவென்று பார்க்கலாம்..... 

• பெண்கள் கெட்ட வார்த்தையை அதிகம் பேசும் ஆண்களிடம் பழக விரும்பமாட்டார்கள். ஏனெனில் இந்த குணம் இருந்தால், எந்த ஒரு சிறு விஷயத்திற்கு திட்டும் போதும், கெட்ட வார்த்தையை பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆண்களுடன் உறவுமுறையைத் தொடர்வதைத் தவிர்ப்பார்கள். 

• நிறைய பெண்களுடன் தொடர்புடைய ஆணுடன் நட்பு கொள்வதையும் வெறுப்பார்கள். ஏனெனில் இந்த குணமுள்ள ஆண்கள் வெறும் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தான் பழகுகிறார்கள் என்ற கருத்து பெண்களின் மனதில் இருப்பதாலேயே. 

• பெண்களுக்கு தினமும் குடிக்கும் ஆண்களை பிடிக்காது. ஏனெனில் அத்தகையவர்களுடன் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வாழ முடியாது என்ற காரணத்தால் தான். 

• தனிமையில் இருப்பது, இருவரும் நன்கு மனம் விட்டு பேச நன்றாக இருக்கும் தான். அதற்காக எப்போதுமே இருவர் மட்டும் தான் எங்கும் செல்ல வேண்டும், இருக்க வேண்டும் என்று நினைத்தால், அது மிகவும் கொடுமையாக இருக்கும். எனவே இத்தகைய குணமுள்ள ஆண்களையும் பிடிக்காது. 

• பெண்கள் சைகோ குணமுள்ள ஆண்களுடன் இருக்கவே வெறுப்பார்கள். ஏனெனில் இத்தகைய குணமுள்ள ஆண்களிடம் எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தும் இருக்கும். 

• பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் காதல் செய்யும் ஆணிடம் ரொமான்ஸ் இல்லாவிட்டால், பின் அதுவே இருவருக்கிடையே சண்டைகளை ஏற்படுத்தி, பிரிவுகளை ஏற்படுத்திவிடும். 

• ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு குறைவு தான். பெரும்பாலான ஆண்களுக்கு கவனக்குறைவு மற்றும் பொறுப்புணர்வு மிகவும் குறைவாக இருப்பதால், அத்தகையவர்களுடன் வாழ்ந்தால் எதையுமே வற்புறுத்தி தான் வரவழைக்க வேண்டும் என்று எண்ணி, இத்தகையவர்களையும் பெண்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது. 

• ஆண்களுள் எவர் மிகவும் சோம்பேறித்தனத்துடனும், எதிலும் ஒரு ஆர்வமின்றியும் இருக்கின்றார்களோ, அத்தகையவர்களால் பெண்களை சுத்தமாக ஈர்க்க முடியாது. 

• சில ஆண்கள் எப்பொழுதும் வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து கொண்டிருப்பார்கள். வீட்டில் இருக்கும் போதும், மனைவியுடன் வெளியில் செல்லும் போதும் வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே இருக்கும். எப்போதுமே வேலையைப் பற்றி எண்ணிக் கொண்டு, துணையுடன் சந்தோஷமாக சிறிது நேரம் கூட செலவழிக்காமல் இருக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்

பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

* பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள். 

* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும். 

* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும் ஒருமுறை மனதில் வாங்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கவே 30 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த நேரம் மட்டும் ஆண்கள் பெண்கள் கைகளில் மாட்டிக் கொண்டால், பொறுமையையே ஆடையாக அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், சண்டைகள் வந்து வீடே இரண்டாகிவிடும். 

* இயற்கையாகவே பெண்களுக்கு சுய அன்பானது அதிகம் இருக்கும். மேலும் எந்த நேரமும் நன்கு அழகாகவே காணப்பட வேண்டும் என்று அழகு மீது அதிக கவனம் கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் மேக்-கப் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.  

ஆனால் அவ்வாறு மேக்-கப் நமது துணைக்கு பிடிக்கிறதா என்று பார்த்து செய்வது நல்லது. ஏனெனில் அவர் தான் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள். ஆகவே அதை மறக்காமல் நடப்பது நல்லது. 

மேற்கூறிய விஷயங்களை பெண்கள் தவிர்த்தால் நிச்சயம் அனைத்து ஆண்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

Thursday, July 18, 2013

கோபத்தால் வரும் பிரச்சனைகள்

1.நமது சொல்லை பிறர் ஏற்காதபோது அல்லது சொல்லியும் கேளாதபோது. 

2.பிறர் நம்மிடம் குறை காணும்போது 

3.பிறர் நம்மை அவமானத்திற்குள்ளாக்கும் போது 

4.நமது விருப்பப்படி காரியங்கள் நடக்காத போது. 

5.களைத்துப் போய் வீடு திரும்புகையில் உணவு சரியில்லாதபோது 

6.குழந்தைகள் தொந்தரவு கொடுக்கும்போது 

7.நமது மனதில் பொறாமை, வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் இருக்கும்போது. 

8.பிறர் நம்மீது காரணத்தோடோ அல்லது அனாவசியமாகவோ கோபிக்கும் போது 

9.தூக்கத்தைக் கெடுக்கும் போது 

10. நமது அவசர வேலையில் பிறர் இடைஞ்சல் செய்யும்போது. 

11.பிறர் பொய் பேசும்போது 

12.நமது பெருந்தன்மையை, பிறர் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் போது. 

13.நோய்வாய்ப்படிருக்கையில், சரியான உபசரிப்பு கிடைக்காதபோது கோபத்தால் புத்தி பேதலிக்கிறது. 

அறிவின் பிரகாசம் மங்கிவிடுகிறது. குளுமை குறைந்து அமைதி குன்றி விடுகிறது. இரத்த ஓட்டம் பாதிக்கிறது. கோபமிருந்தால் ஒருபோதும் இறையுணர்வை அனுபவிக்க முடியாது. கட்டுப்பாடு தவறி விடுவதால் எந்த ஒருவேலையையும் திறமையாகச் செய்ய முடியாது. 

உள்ளுக்குள் சூட்சுமமாக அடங்கியிருக்கும் பொறாமை மற்றும் பலவீனத்தின் அறிகுறியே கோபமாகும். இதனால் உறவு கெடும். குடும்பத்திலும் காரியாலயத்திலும் சுமுக நிலை பாதிக்கப்படும். 

அதிருப்தி நிலவும், பிறருக்கு அறிவுரை கூற முற்படுபவர், ஆனால் பிறர் சொல்லைக் கேளார். இதனால் தானும் துன்புறுவதோடு, பிறரும் இவரால் துன்புறுவர். இத்தகையோருக்கு வாழ்வில் அமைதி எப்படி கிட்டும். மொத்தத்தில் வாழ்வே காய்ந்து போய் விடும்.